கணேஷ் பூஜையில் தடுமாறிய ஆலியா பட்... தாங்கிப் பிடித்த ரன்பீர் கபூர்

சென்னை: முகேஷ் அம்பானி வீட்டில் நடந்த நட்சத்திர கணேஷ் சதுர்த்தி பூஜையில் பாலிவுட்டின் காதல் பறவைகளான ரன்பீர் கபூர்-ஆலியா பட் ஜோடி கலந்து கொண்ட ஃபோட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாலிவுட்டின் லவ் பேர்ட்ஸ் ரன்பீர் கபூர்-ஆலியா பட் இருவரின் காதல் இந்தித் திரையுலகம் அறிந்த ஒன்று. இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்.

Ranbir Kapoor-Aliya Bhatt couple attend Mukesh Ambani house Ganesh Chaturthi Puja

எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் ஜோடியாகவே ஆஜராகிறார்கள். தற்போதைய ட்ரெண்ட் ரன்பீர் கபூர் - ஆலியா பட் ஜோடி நட்சந்திரங்களுக்கான கணேஷ் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டு விநாயகரின் அருளை பெற்றது.

முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி தங்களது ஆன்டிலியா மாளிகையில் இந்த கணேஷ் சதுர்த்தியை முன்னிட்டு ஒரு சிறப்பு நட்சத்திர கணேஷ் சதுர்த்தி கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் பாலிவுட்டின் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவிற்கு ரன்பீர் கபூர்-ஆலியா பட் ஜோடியாக கலந்து கொண்டனர். அம்பானியின் மாளிகையின் வெளியில் விழாவிற்கு வருகை தரும் பிரபலங்களுக்காக ஒரு போட்டோ ஷூட் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதில் இந்த காதல் ஜோடி புகைப்படம் எடுத்த போது ஆலியா பட் கொஞ்சம் தடுமாறினார். உடனே சுதாரித்த காதலனோ காதலியை கீழே விழ விடாமல் தாங்கிக்கொண்டார். இந்த அழகிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் வலைதளங்களில் வைலராகி வருகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு ரன்பீர் கபூர் நேருவின் ஜாக்கெட்- பேண்ட் போன்ற ஸ்டைலில் ஒரு குர்தா அணிந்திருந்தார். ஆலியா பட் ஒரு அழகிய மலர் சேலையில் தேவதை போல இருந்தார். இவர்களின் திருமணம் 2020ஆம் ஆண்டில் நடக்கவிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இது எதுவரை உண்மை என்பது நடக்கும் போது தான் தெரியவரும். இருப்பினும் இந்த அழகிய காதல் ஜோடி என்றென்றும் அன்போடு நிலைத்து நீடூழி வாழ வாழ்த்துக்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X