ரன்பீர் கபூர் – ஆலியா பட் திருமணம்.. மும்பையில் குவிந்த பாலிவுட் பிரபலங்கள்.. ராஜமெளலி பங்கேற்பு?

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் திருமணம் இன்று ரொம்பவே சீக்ரெட் ஆன முறையில் மும்பையில் நடைபெற்று வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியின் திருமணம் பிரம்மாண்டமான முறையில் நடைபெறாமல் செம்பியூரில் உள்ள ஆர்.கே. இல்லத்தில் எளிமையான முறையில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ நடைபெறுகிறது.

ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஆலியா பட் நடித்திருந்த நிலையில், தனி விமானத்தில் இயக்குநர் ராஜமெளலி, ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் திருமணத்துக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரன்பீர் - ஆலியா பட் திருமணம்

ரன்பீர் - ஆலியா பட் திருமணம்

மறைந்த பிரபல நடிகர் ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூருக்கும் இயக்குநர் மகேஷ் பட்டின் மகள் ஆலியா பட்டுக்கும் இன்று திருமணம் நடைபெற போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் நட்சத்திர ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஹல்தி மற்றும் மெகந்தி

ஹல்தி மற்றும் மெகந்தி

ஹல்தி என அழைக்கப்படும் நலங்கு திருவிழா ஒரு நாளும், மெகந்தி திருவிழா ஒரு நாளும், சங்கீத் உள்ளிட்ட திருமணத்திற்கு முந்தைய சுப நிகழ்ச்சிகள் அனைத்தையும் நேற்றே ரொம்பவே சிம்பிளான முறையில் நடத்தி முடித்துள்ளதாக கூறுகின்றனர். ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் திருமணத்தை முன்னிட்டு நடைபெற்ற எந்த வைபவ புகைப்படங்களும் இன்னமும் வெளியாகாமல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

தனி விமானத்தில் RRR டீம்

தனி விமானத்தில் RRR டீம்

ஒட்டுமொத்த பாலிவுட் பிரபலங்களுக்கும் அழைப்பு விடுத்து கோலாகலமாக இந்த திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தவில்லை. எளிமையான முறையில் இல்லத்திலேயே நடக்கும் இந்த திருமணத்திற்கு ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இயக்குநர் ராஜமெளலி, ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் தனி விமானத்தில் மும்பைக்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜொலிக்கும் உடையில் கரீனா

ஜொலிக்கும் உடையில் கரீனா

வெள்ளை நிறத்தில் ஜொலிக்கும் உடையில் நடிகை கரீனா கபூர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் திருமணத்திற்கு செல்வதை உணர்த்தி உள்ளார் கரீனா கபூர். மேலும், கரீஷ்மா கபூர் உள்ளிட்ட முக்கிய பாலிவுட் நடிகர்கள் இந்த திருமணத்தில் பங்கேற்றுள்ளனர்.

அவசர திருமணம் ஏன்

அவசர திருமணம் ஏன்

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியாவின் திருமண புகைப்படங்களை காண ரசிகர்கள் ரொம்பவே ஆவலுடன் காத்திருக்கின்றனர். திருமண புகைப்படங்கள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆலியா பட் தாத்தாவின் உடல் நிலை சரியில்லாத நிலையில், பேத்தியின் திருமணத்தை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டதால் தான் பிரம்மாஸ்திரம் படம் வெளியாவதற்கு முன்னமே இப்படி அவசர அவசரமாக திருமணத்தை நடத்துகின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X