பிறந்தநாள் கொண்டாட்டத்தில் காதலிக்கு கன்னத்தில் நச்சென இச்சு கொடுத்த நடிகர்.. தீயாய் பரவும் போட்டோ!
மும்பை: தனது காதலியான ஆலியா பட்டின் பிறந்த நாளில் ரன்பீர் கபூர் அவருக்கு முத்தம் கொடுத்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் சினிமாவில் தற்போதைய டாப் காதல் ஜோடிகளில் ரன்பீர் கபூரும் ஆலியா பட்டும் முக்கியமானவர்கள். இவர்கள் இருவரும் 2018 ஆம் ஆண்டு முதலே ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர்.
இவர்களின் திருமணம் குறித்து 2019ஆம் ஆண்டே தகவல் வெளியானது. ஆனால் அப்போது ரன்பீரின் தந்தை ரிஷி கபூர் புற்றுநோய்க்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றதால் திருமணத்தை தள்ளி வைத்தனர்.

டிசம்பரில் திருமணம்
இந்நிலையில் நடிகர் ரன்பீர் கபூரும் நடிகை ஆலியா பட்டும் பிரம்மாஸ்திரா என்ற படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படம் வரும் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது. இதனை தொடர்ந்து, டிசம்பர் மாதத்தில் இவர்களுடைய திருமணம் நடைபெறலாம் என்று தகவல்கள் வெளியாகிவருகின்றன.

கன்னத்தில் முத்தம்
நடிகை ஆலியா பட் நேற்று தனது பிறந்த நாளை தனது நெருங்கிய தோழிகளுடன் கொண்டாடினார். இந்நிலையில் ஆலியா பட்டின் பெஸ்டியான, நடாஷா பூனவல்லா ஒரு போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ரன்பீர் கபூர் ஆலியா பட்டிற்கு கன்னத்தில் முத்தம் கொடுக்கிறார்.

வைரலில் போட்டோஸ்
இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
முன்னதாக ஆலியா பட் தனது காதலரான ரன்பீர் கபூருடன் விடுமுறையை கழித்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ஆலியா பட் ரன்பீர் கபூர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸை கொண்டாடிய போட்டோக்கள் வெளியானது.

தீயாய் பரவும்
இருவரும் ஒன்றாக தங்களின் குடும்பத்தினருக்கு விருந்து கொடுத்தனர். இரு குடும்பத்தினரும் ஒன்றாக சாப்பிடும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இருவரும் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில் காதலிக்கு பிறந்த நாள் பரிசாக கொண்டாட்டத்தில் காதலர் ரன்பீர் கபூர் முத்தம் கொடுத்த போட்டோ தீயாய் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











