தீபிகா, ரன்வீர் திருமண வரவேற்பு: வராத முன்னாள் காதலர், வந்த முன்னாள் காதலி

By Siva

Recommended Video

தீபிகா படுகோன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி- வீடியோ

மும்பை: தீபிகா, ரன்வீர் சிங்கின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒரு அதிசயம் நடந்துள்ளது.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார்கள். இதையடுத்து அவர்கள் பெங்களூர் மற்றும் மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.

மும்பையில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சில அதிசயங்கள் நடந்துள்ளது.

 ஜெயா பச்சன்

ஜெயா பச்சன்

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், அவரின் மாமியார் ஜெயா பச்சனுக்கும் ஆகாது என்பது இந்தி திரையுலகில் உள்ளவர்களுக்கு நன்கு தெரியும். இந்நிலையில் தீபிகா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் தனது மாமியாருடன் சேர்ந்து நடனமாடியதை பார்த்து பாலிவுட்காரர்களால் அவர்களின் கண்களையே நம்ப முடியவில்லை.

 அனுஷ்கா சர்மா

அனுஷ்கா சர்மா

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு நடிகர் ரன்பிர் கபூர் வரவில்லை. அவரும், தீபிகாவும் ஒரு காலத்தில் காதலித்தார்கள். ஆனால் ரன்வீர் சிங்கின் முன்னாள் காதலியான அனுஷ்கா சர்மா வந்திருந்தார்.

 தீபிகா

தீபிகா

ரன்பிர் கபூர் வராவிட்டாலும் அவரின் தம்பி ஆதார் ஜெயின், அக்கா கரிஷ்மா கபூர் வந்திருந்தார்கள். ஆதாரும், தீபிகாவும் சேர்ந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர். முன்னதாக பார்ட்டி ஒன்றில் ஆதாரும், தீபிகாவும் மது அருந்திவிட்டு எடுத்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.

நடனம்

நடனம்

தீபிகாவும், ரன்வீரும் அமிதாப் பச்சன் மற்றும் அவரின் மனைவி ஜெயாவுடன் சேர்ந்து டான்ஸ் ஆடினார்கள். டான்ஸ் ஆடும்போது தீபிகா தனது ஹை ஹீல்ஸை கழற்றிவிட்டு ஷூ போட்டுக் கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X