நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் யுத்தம்.. “பிரம்மாஸ்திரம்“ டிரைலர் வெளியானது !
சென்னை : பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ள பிரம்மாஸ்திரம் திரைப்படத்தின் மிரட்டலான டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் மூன்று பாகங்களாக வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது.
தீமை - நன்மை ஆகியவற்றுக்கு இடையே நடக்கும் யுத்தம் தான் இந்த பிரம்மாஸ்திரம் படத்தின் முதல் பாகத்தின் கதையாகும்.

பிரம்மாஸ்திரம் என்றால் என்ன
பிரம்மாஸ்திரம் என்பது மகாபாரத போரில் பயன்படுத்தபட்ட மிகவும் சக்திவாய்ந்த கொடிய ஆயுதம்.இதற்கு பிரம்மஷிரிஷ அஸ்திரம் அல்லாது பிரம்மாண்ட அஸ்திரம் என்ற பெயரும் உண்டு.இந்த ஆயுதம் பிரம்மனால் உருவாக்கப்பட்டது என்பதால் இதற்கு இந்த பெயர்.சகல ஸ்ருஷ்டியையும் பூமி பிரம்மாண்டத்தையும் ஒரே நொடியில் அழிக்க கூடிய சக்தி பிரம்மாஸ்திரத்துக்கு மட்டுமே உரியதாகும்.

பல முன்னணி நடிகர்கள்
இந்த பிரம்மாஸ்திரத்தின் அடிப்படையை உருவாகி உள்ள திரைப்படம் தான் பிரம்மாஸ்திரம். இப்படத்தை இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா, மெளனி ராய் மற்றும் சிறப்பு தோற்றத்தில் ஷாருக்கான் என ஏகப்பட்ட பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும், நாகினி தொடரில் நடித்த மௌனி ராய் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கியரோலில் நடித்துள்ளார்.

பிரம்மாஸ்திரம் டிரைலர்
300 கோடி ரூபாய் பட்ஜெட்டில், மாயாஜாலங்கள் நிறைந்த படு மிரட்டலாக திரைப்படமாகவே இத்திரைப்படம் உருவாகி உள்ளது. இதிகாச தொடர்புடைய படமாகவே உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் , நீர்,காற்று , நெருப்பு பண்டைய காலத்தில் இருந்தே சில சக்திகள் எல்லாம் சில அஸ்திரங்களுக்குள் மறைந்து இருகிறது... இந்த கதை அஸ்திரங்களுக்கு எல்லாம் அதிபதியின் கதை என மிரட்டலான டிரைலர் வெளியாகி உள்ளது.

செப்டம்பரில் ரிலீஸ்
இந்திய இதிகாசம் மற்றும் நவீன உலகம் என இரண்டும் கலந்த ஒரு படமாக இப்படம் இயக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது. பான் இந்திய திரைப்படமாக இப்படம் வெளியாக உள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் யுத்தம்
ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இருவரின் திருமணத்திற்கு பின்பு இத்திரைப்படம் வெளியாக உள்ளது. நெருப்பின் சக்தி பெற்ற இளைஞன் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். மூன்று பாகமாக வெளியாக உள்ள இப்படத்தின் முதல் பாகத்தில் தீமை மற்றும் நன்மை ஆகியவற்றுக்கு இடையே நடக்கும் யுத்தம் பிரம்மாஸ்திரம் திரைப்படத்தின் கதையாகும்.


Click it and Unblock the Notifications











