மாரடைப்பு.. பிரபல ஹீரோ போலவே அச்சு அசல் தோற்றம் கொண்ட மாடல் திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

By

மும்பை: பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் சாயலை கொண்டிருந்த பிரபல மாடல் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூர். சமீபத்தில் மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூரின் மகன் இவர்.

பிரபலமான சினிமா குடும்பத்தை சேர்ந்த இவர், ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார்.

சஞ்சய் தத் பயோபிக்

சஞ்சய் தத் பயோபிக்

ராக்கெட் சிங், ராஜ்னீதி, அஞ்சனா அஞ்சானி, சில்லர் பார்ட்டி, பார்ஃபி, பிகே, சஞ்சய் தத்தின் வாழ்க்கை கதையாக சஞ்சு உட்பட பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர். இப்போது ஷம்ஷேரா, பிரம்மாஸ்த்ரா படங்களில் நடித்து வருகிறார். கொரோனா பிரச்னைகளுக்கு பிறகு இதன் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்க இருக்கிறது.

நடிகை ஆலியா பட்

நடிகை ஆலியா பட்

கடந்த 2018 ஆம் ஆண்டுக்கு முன் நடிகைகள் தீபிகா படுகோன், கேத்ரினா கைப் உட்பட சில நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்ட ரன்பீர் சிங், இப்போது நடிகையும் பிரபல இயக்குனர் மகேஷ் பட்டின் மகளான ஆலியா பட்-டை காதலித்து வருகிறார். இருவரும் ஒன்றாக ஒரு பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். ரிஷி கபூர் மரணத்தின் போது கூட அவரது இறுதி சடங்கில் கலந்துகொண்ட குறைவான நபர்களில் அவரும் ஒருவராக இருந்தார்.

ரன்பீர் கபூர் சாயல்

ரன்பீர் கபூர் சாயல்

தற்போது கரோனா பாதிப்பால் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைத்து சினிமா கலைஞர்களும் வீட்டில் நேரத்தைக் கழித்து வருகின்றனர். சிலர் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில் நடிகர் ரன்பீர் கபூரை அப்படியே உரித்து வைத்தது போல இருந்தவர் பிரபல மாடல், ஜூனைத் ஷா.

நடிகர் ரிஷி கபூர்

நடிகர் ரிஷி கபூர்

காஷ்மீரைச் சேர்ந்தவரான இவர், மும்பையில் தங்கி மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார். அத்துடன் அனுபம் கெரின் நடிப்புப் பள்ளியில் சேர்ந்தும் படித்துள்ளார். ரன்பீர் கபூரின் சாயலை அப்படியே கொண்டிருந்த அவரது புகைப்படத்தைக் கண்டு, மறைந்த நடிகர் ரிஷி கபூரே ஆச்சரியப்பட்டார். இதுபற்றி கடந்த சில வருடங்களுக்கு முன் ட்விட்டரிலும் அதை பதிந்திருந்தார்.

திடீர் மாரடைப்பு

திடீர் மாரடைப்பு

கடந்த 2014-15 ஆம் ஆண்டுகளில் ரன்பீர் போல ஸ்டைலான போட்டோஸ் வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். இதனால் சமூக வலைதளங்களில் பிரபலமான ஜூனைத் ஷாவுக்கு ரசிகர்கள் பெருகினர். இந்நிலையில் இவர் மாரடைப்பு காரணமாக ஶ்ரீநகரில் உள்ள வீட்டில் திடீரென இன்று மரணமடைந்துள்ளார். இதை காஷ்மீரைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் யூசுப் ஜமீல் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X