அந்த நடிகை மேட்டருக்கு பிறகு மீடியாவுக்கு டிமிக்கி கொடுக்க பலே ஐடியா போட்ட வாரிசு நடிகர்
மும்பை: பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் மீடியா கண்ணில் படமால் இருக்க பலே ஐடியா போட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரும் அவரது காதலியான கத்ரீனா கைஃபும் பிரிந்து விட்டனர். அதன் பிறகு கத்ரீனா தனது முன்னாள் காதலரான சல்மான் கானுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.
ரன்பிரின் பெயர் சில நடிகைகளுடன் சேர்ந்து அடிபடுகிறது.

புகைப்படம்
ரன்பிர் கபூரும், பாகிஸ்தானை சேர்ந்த நடிகை மாஹிரா கானும் அமெரிக்காவில் தம்மடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

விமர்சனம்
ஏற்கனவே ரன்பிரும், மாஹிராவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இந்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையானது. மாஹிராவின் உடையை பார்த்தவர்கள் அவரை கண்டமேனிக்கு திட்டினார்கள்.

ஐடியா
மீடியா கண்ணில் படாமல் இருக்க புது ஐடியா போட்டுள்ளார் ரன்பிர் கபூர். காரில் இருந்தால் தூங்குவது போன்று நடித்து எஸ்கேப் ஆகிவிடுகிறார். கண்ணை திறந்தால் தானே புகைப்படம் எடுப்பீர்கள், கேள்வி கேட்பீர்கள் என்று இப்படி செய்கிறார்.

பந்த்ரா
மும்பை பந்த்ரா பகுதியில் ஏராளமான பத்திரிகையாளர்கள் சுற்றுவதால் அங்குள்ள எந்த உணவகத்திற்கு சென்றாலும் தப்பிக்க முடியாது. இதனால் பத்திரிகையாளர்கள் இல்லாத தெற்கு மும்பை பக்கம் பார்ட்டிக்கு செல்கிறாராம் ரன்பிர்.


Click it and Unblock the Notifications











