அது மட்டுமில்லைன்னா எப்பவோ கல்யாணம் ஆகியிருக்கும்.. ஆலியாவுடன் எப்போ திருமணம்? மனம் திறந்த ரன்பீர்!
மும்பை: பாலிவுட் நடிகை ஆலியா பட்டுக்கும் தனக்கும் விரைவில் திருமணம் நடைபெறப் போவதாக நடிகர் ரன்பீர் கபூர் அறிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர்.
இருவரது திருமணம் எப்போ தான் நடக்கும் என ரசிகர்கள் ஆர்வமாக இருந்த நிலையில், தற்போது அது பற்றி நடிகர் ரன்பீர் மனம் திறந்து பேசியுள்ளது பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

ரன்பீர் கபூர்
38 வயதாகும் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், 2007ம் ஆண்டு சாவரியா படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே தோல்வியை தழுவினாலும், ரன்பீர் கபூர் தனது சிறந்த நடிப்பால் ஏகப்பட்ட ஹிட் படங்களை பாலிவுட்டில் கொடுத்துள்ளார். வேக் அப் சித், ராஜ்நீதி, ராக்ஸ்டார், பர்ஃபி, ஹே ஜவானி ஹை திவானி, சஞ்சு உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடித்துள்ளார்.

ஆலியா பட்
குழந்தை நட்சத்திரமாக சங்கர்ஷ் படத்தில் அறிமுகமான நடிகை ஆலியா பட், 2012ம் ஆண்டு ஸ்டூடன்ட் ஆப் தி இயர் படத்தின் மூலம் அறிமுகமானார். பாலிவுட்டின் பிரபல இயக்குநர் மகேஷ் பட்டின் மகளான இவர், ஹீரோயினாக பாலிவுட்டில் அடியெடுத்து வைத்து, இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக உயர்ந்தார். 2 ஸ்டேட்ஸ், உத்தா பஞ்சாப், ராஸி, கல்லி பாய் என ஏகப்பட்ட படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்திய ஆலியா பட் இயக்குநர் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து வருகிறார்.

ஆலியா ரன்பீர் காதல்
2016ம் ஆண்டு வெளியான ஏய் தில் ஹை முஷ்கில் எனும் ஷாருக்கான் படத்தில் இருவரும் இணைந்து நடித்த நிலையில், இருவருக்குள்ளும் கொஞ்சம் கொஞ்சமாக காதல் மலர்ந்தது. இருவரும் இணைந்து நடித்துள்ள பிரம்மாஸ்த்திரா திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் திருமணம்
இந்நிலையில், பிரபல விமர்சகர் ராஜீவ் மசாந்த் உடன் நடத்திய உரையாடலில் நடிகர் ரன்பீர் கபூரிடம் எப்போ திருமணம் என்கிற கேள்வி முன் வைக்கப்பட்ட நிலையில், தனது காதலியான ஆலியா பட்டை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என அதிரடியாக ரன்பீர் கபூர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே நடந்திருக்கும்
கொரோனா பரவல் மட்டுமில்லையென்றால், இந்நேரம் எங்கள் திருமணம் எப்பவோ நடந்திருக்கும் என சிரித்துக் கொண்டே ரன்பீர் கபூர் சொன்ன பதில் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. இதுவரை ரன்பீரும் ஆலியாவும் தங்களை காதலர்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், ரன்பீர் கபூரின் இந்த ஸ்டேட்மெண்ட் இருவரது ரசிகர்களையும் குஷியில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











