பப்ளிக்கில் நாகர்ஜுனா, ராஜமெளலி காலில் விழுந்த ரன்பீர் கபூர்

சென்னை : அயன் முகர்ஜீ இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகர்ஜுனா உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடிக்கும் படம் பிரம்மாஸ்திரா. இந்தியாவின் பிரம்மாண்ட படைப்பாக பெரிய பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Nagarjuna Speech |ராஜமௌலி என்னுடன் படம் பண்ணுவார் என்று நம்புகிறேன் | *Kollywood

மூன்று பாகங்களாக உருவாக்கப்பட உள்ள பிரம்மாஸ்திரா படத்தின் முதல் பாகம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் செப்டம்பர் 9 ம் தேதி தியேட்டரில் ரிலீசாகிறது.

இந்த படத்தை தென்னிந்திய மொழிகளில் பிரபல டைரக்டர் ராஜமெளலி வெளியிடுகிறார். இந்த படத்தின் ப்ரொமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் ப்ரொமோஷனுக்காக ரன்பீர் கபூர், நாகர்ஜுனா, ராஜமெளலி ஆகியோர் சென்னை வந்தனர்.

காலில் விழுந்த ரன்பீர் கபூர்

காலில் விழுந்த ரன்பீர் கபூர்

ப்ரொமோஷன் நிகழ்ச்சிக்கு வந்த ரன்பீர் கபூர், நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்த போது அங்கு நின்ற நாகர்ஜுனா காலில் விழுந்து வணங்கினார். நாகர்ஜுனா அவரை கட்டிப்பிடித்து பேசிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்த ராஜமெளலியை பார்த்ததும் அவர் காலிலும் விழுந்தார் ரன்பீர் கபூர்.

என்ன ஒரு மரியாதை

என்ன ஒரு மரியாதை

பொது இடம் என்றும் பார்க்காமல் பலரும் கூடி இருக்கும் இடத்தில் ரன்பீர் கபூர், தான் பெரிய ஸ்டார் என்ற ஈகோ இல்லாமல் பட்டென மரியாதையாக சீனியர்கள் காலில் விழுந்த வீடியோ சோஷியல் மீடியாவில் பரவி, பாராட்டுக்களை பெற்றுள்ளது. இந்த 3 பிரபலங்களுக்கும் கேரள பாரம்பரிய முறைப்படி செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

தலைவாழை விருந்து

தலைவாழை விருந்து

இந்த ப்ரொமோஷன் நிகழ்ச்சிக்கு முன் ரன்பீர், நாகர்ஜுனா, ராஜமெளலி மூவரும் தலைவாழை இலை போட்டு தமிழக பாரம்பரிய உணவு வகைகளை ரசித்து சாப்பிட்டுள்ளனர். இவர்கள் ஒன்றாக சாப்பிட்ட போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஒவ்வொரு உணவு வகையையும் கேட்டு வாங்கி, ரன்பீர் சாப்பிட்ட காட்சிகள் பலரையும் கவர்ந்துள்ளது.

பிரம்மாஸ்திராவை எதிர்பார்க்கும் பாலிவுட்

பிரம்மாஸ்திராவை எதிர்பார்க்கும் பாலிவுட்

தொடர்ந்து ரசிகர்களிடமும் ரன்பீர் கபூர் கலந்துரையாடினார். 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியில் நாகர்ஜுனா நடித்துள்ள படம் என்பதால் தெலுங்கு ரசிகர்களிடமும் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது. பிரம்மாஸ்திரா படம் பாலிவுட்டில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் தோல்விகளுக்கு பதிலடியாக 2022ல் மிகப் பெரிய வெற்றியை இந்த படம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X