ஒரே அசிங்கமா போச்சு குமாரு.. சிரித்த மகேஷ் பாபு.. சங்கடத்தில் அனிமல் ஹீரோ ரன்பீர் கபூர்?
ஹைதராபாத்: தனது பிரம்மாஸ்திரம் படத்தின் புரமோஷனுக்காக இயக்குநர் ராஜமெளலியை அணுகிய நிலையில், அதே போல அனிமல் படத்தையும் ராஜமெளலியை வைத்தே புரமோஷன் செய்திருக்கிறார் ரன்பீர் கபூர்.
ராஜமெளலி இயக்கத்தில் அடுத்து மகேஷ் பாபு நடிக்க உள்ள நிலையில், ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சிக்கு மகேஷ் பாபுவும் என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டினார்.

ஒட்டுமொத்தமாக தெலுங்கு மக்கள் கூடியிருக்கும் மேடையை பயன்படுத்திக் கொண்டு தெலங்கானா அமைச்சர் டோலிவுட்டை உயர்த்தியும் பாலிவுட்டை தாழ்த்தியும் பேசியது ரன்பீர் கபூரை ரொம்பவே அப்செட் செய்துள்ளது என்கின்றனர்.
அனிமல் புரமோஷன்: அர்ஜுன் ரெட்டி இயக்குநர் இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், அனில் கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள அனிமல் திரைப்படம் வரும் டிசம்பர் 1ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. பாலிவுட்டில் படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை அள்ளி விடும். அதே அளவுக்கு டோலிவுட்டிலும் வசூல் அள்ள வேண்டும் என்பதற்காக அனிமல் பட புரமோஷனை ஹைதராபாத்தில் சில தினங்களுக்கு முன்னதாக பிரம்மாண்டமாக நடத்தி உள்ளனர்.
ராஜமெளலி கேட்ட கேள்வி: அந்த விழாவில் ரன்பீர் கபூரை பார்த்து இயக்குநர் ராஜமெளலி சந்தீப் ரெட்டி வங்காவை பிடிக்குமா? அல்லது என்னை பிடிக்குமா? என கேள்வி எழுப்பினார். இருவரையும் பிடிக்கும், எக்ஸ்ட்ரா ஷிஃப்ட் போட்டுக் கூட வொர்க் பண்ண ரெடி என ரன்பீர் சொல்ல, அதெல்லாம் முடியாது ஒருவரை மட்டும் தான் சொல்லணும் என ராஜமெளலி செக் வைக்க சந்தீப் ரெட்டி வங்கா தான் என்றதும் சூப்பர் என ராஜமெளலி பாராட்டினார்.
பாலிவுட்டை அசிங்கப்படுத்தி: மகேஷ் பாபு, ராஜமெளலி என பலரும் அனிமல் படத்தை பாராட்டி பேசி வந்த நிலையில், தெலங்கானா அமைச்சர் சமக்குரா மல்லா ரெட்டி என்பவர் மேடை ஏறி பேசினார். பாலிவுட் எல்லாம் காலியாகி விட்டது. ரன்பீர் கபூர் நீங்க உங்க வீட்டை ஷிஃப்ட் பண்ணிட்டு ஹைதராபாத்துக்கு வந்துடுங்க, டோலிவுட் தான் இந்தியாவிலேயே நம்பர் ஒன் சினிமா இண்டஸ்ட்ரி என பேசினார்.
சிரித்த மகேஷ் பாபு நெளிந்த ரன்பீர்: பாலிவுட்டால் எனக்கு சம்பளம் கொடுக்க முடியாது என சொன்ன மகேஷ் பாபு அமைச்சரின் பேச்சை ரசித்து சிரிக்க, ரன்பீர் கபூர் சங்கடத்தில் நெளிந்த காட்சிகளை ரசிகர்கள் ஷேர் செய்து பாலிவுட் ஏன் தென்னிந்திய சினிமா உலகினரிடம் பிச்சை எடுக்க வேண்டும், அவர்கள் படத்தை இனிமேல் நாம் இங்கே ஆதரிக்கக் கூடாது என பிரச்சனையை ஸ்டார்ட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











