Animal Box Office collection: வசூல் வேட்டை நடத்தும் அனிமல்..மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை: ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்த அனிமல் திரைப்படம் ரூ 500 கோடி வசூலை நெருங்கியுள்ளது.

அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா அனிமல் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இதில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், அனில் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், ட்ரிப்டி டிம்ரி, சக்தி கபூர் மற்றும் பிரேம் சோப்ரா ஆகியோரும் நடித்துள்ளனர்.

அனிமல் படத்தின் கதை: தந்தையின் மீது அதீத அன்பு வைத்திருக்கும் கதாநாயகன் அவரால் நிராகரிக்கப்படுகிறார். ஆனால், அதே தந்தையின் உயிருக்கு ஆபத்து வரும்போது கதாநாயகன் எந்த எல்லைவரை செல்கிறார் என்பதே அனிமல் படத்தின் கதை. உணர்ச்சிவசமான ஒரு கதையை பின்னணியாக வைத்துக் கொண்டு கேங்ஸ்டர் படமாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா.

Ranbir Kapoors Animal movie box office collection

கடும் விமர்சனம்: டிசம்பர் 1ந் தேதி வெளியான இப்படத்தில் பெண் வெறுப்பை ஊக்குவிக்கும் பல்வேறு விதமான கருத்துக்கள் இடம் பெற்றிருப்பதாக படத்திற்கு மேல் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஆனால், அனுராக் கஷ்யப், ராம் கோபால் வர்மா போன்ற இயக்குநர்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

நெட்டிசன்ஸ் கண்டனம்: மறுபக்கம் பல்வேறு பிரபலங்கள் அனிமல் படத்தை விமர்சித்துள்ளார்கள். இந்திய அணி கிரிக்கெட் வீரர் ஜெயதேவ் உனட்கட் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதே நேரம், அனிமல் படத்தை புகழ்ந்த நடிகை த்ரிஷா, நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர். இதனை தொடர்ந்து, த்ரிஷா அந்தப் பதிவை அவர் நீக்கினார்.

நாடாளுமன்றத்தில் சர்ச்சை: அதுமட்டுமில்லாமல் அனிமல் பட விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது, மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் எம்பி ரஞ்சீத் ரஞ்சன், இப்படத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் காட்டப்படுகிறது. இது இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இப்படம் அந்த செயல்களை நியாயப்படுத்தும் வகையில் உள்ளது என்று அனிமல் படத்தை கடுமையாக விமர்சித்தார்.

மொத்த வசூல்: அனிமல் படத்திற்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், மற்றொரு தரப்பு ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருவதால் படம் வசூலை குவித்து வருகிறது. கடந்த 1ந் தேதி வெளியான இத்திரைப்படம் இரண்டாவது வாரத்தில் ரூபாய் 139.26 கோடி வசூலித்தது. உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் முதல் வாரத்தில் அனைத்து மொழிகளிலும் ரூபாய் 337.58 கோடி வசூல் செய்த இப்படம் 15 நாட்களில் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் ₹484.34 கோடியை குவித்துள்ளது. இந்தியாவில் ₹568.4 கோடியும், வெளிநாட்டில் ₹215.6 கோடியும் வசூலித்துள்ள இப்படம் மொத்த வசூல் ₹784 கோடியை எட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X