Animal Teaser - பட்டையை கிளப்பும் அனிமல் ட்ரெய்லர்.. வேற மாதிரியான ரன்பீர் கபூர்
மும்பை: Animal Teaser (அனிமல் டீசர்) ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியிருக்கும் அனிமல் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தனது முதல் படமாக அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்திருந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமின்றி விஜய் தேவரகொண்டாவுக்கு பல பெண் ரசிகைகளையும் பெற்றுக்கொடுத்தது. மேலும், தமிழில் ஆதித்ய வர்மா எனவும், ஹிந்தியில் கபிர் சிங் என்ற பெயரிலும் ரீமேக்கானது குறிப்பிடத்தக்கது.

ஹிந்தியில் சந்தீப்: சந்தீப் ரெட்டி இப்போது ஹிந்தியில் ரன்பீர் கபூரை வைத்து அனிமல் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதில் அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். குல்ஷன்குமார் மற்றும் டி - சீரிஸ் நிறுவனமும், முராத் கெடானியின் சினி 1 ஸ்டூடியோஸ் மற்றும் பிரனாய் ரெட்டி வான்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கின்றனர்.
பான் இந்தியா படம்: அனிமல் படமானது பான் இந்தியா படமாக வெளியாகவிருக்கிறது. ராஷ்மிகா மந்தனாவும் இப்போது நேஷனல் க்ரஷ்ஷாக மாறியிருக்கிறார். அவர் இந்தப் படத்தில் கீதாஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா இந்தப் படத்தின் மூலம் ஹிந்தியிலும் முன்னணி ஹீரோயினாக வலம் வருவார் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அனிமல் ப்ரீ டீசர்: அனிமல் படத்தின் ப்ரீ டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதனை பார்த்த ரசிகர்கள் இதில் ரன்பீர் கபூர் வித்தியாசமாக இருக்கிறாரே என ஆச்சரியப்பட்டனர். குறிப்பாக இதுவரை சாக்லேட் பாய் தோற்றத்திலேயே இருந்த ரன்பீர் கபூர் இதில் முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோவாக தோன்றியிருந்தார். எனவே ரன்பீர் கபூருக்கும் இந்தப் படம் முக்கியமானதாக இருக்கும் என அவரது ரசிகர்கள் கருதுகின்றனர்.
அனிமல் டீசர்: இந்நிலையில் அனிமல் படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது. டீசரை பார்க்கையில் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே இருக்கும் உறவை படம் பேசுகிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக கெட்டதை நோக்கி நான் சென்றேன். அது என் கண்ணில் படவில்லை. பிறகு என்னையே நான் உற்று பார்த்தேன். என்னைவிட கெட்டவன் எவனுமில்லை என்பது தெரிய வந்தது" என்ற வசனம் கவனம் ஈர்ப்பதாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











