மும்பையில் ரன்பீர் - காத்ரீனா வாங்கும் காதல் குடில்.. ரூ. 20 கோடியில்!
மும்பை: மும்பையின் பாந்த்ரா பகுதியில் சுமார் ரூ. 20 கோடி மதிப்பில் வீடு ஒன்றை வாங்க ரன்பீர் - கத்ரீனா ஜோடி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் மண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கப் போகின்றனர் பாலிவுட் நடிகர் ரன்பீரும், அவாது காதலி நடிகை கத்ரீனாவும். எனவே திருமணத்திற்குப் பின்னர் தங்கள் புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பதற்காக புதிய வீடு ஒன்றை வாங்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே தேடுதல் வேட்டையை அவர்கள் ஆரம்பித்து விட்டார்களாம்.

பாந்த்ரா பகுதியில்...
அவர்களது அந்த கனவு இல்லம், மும்பையில் பாந்த்ரா பகுதியில் அமைய வேண்டும் என்பது தான் அவர்களது எண்ணம். அதனாலேயே பொருத்தமான வீட்டை அவர்கள் தேடி வந்தார்கள்.

கனவு இல்லம்...
இந்நிலையில், தற்போது அவர்களது கற்பனையில் இருந்த கனவு இல்லத்தைக் கண்டுபிடித்து விட்டார்கள். அதுவும் பாந்த்ரா பகுதியிலேயே.

பார்த்த முதல்நாளே...
பார்த்த முதல் பார்வையிலேயே அவர்களுக்கு இந்த வீடு மிகவும் பிடித்து விட்டதாம். பல மாடிக் கட்டிடமான இதில் 4,5 மற்றும் 6வது மாடிகளை வாங்க இவர்கள் திட்டமிட்டுள்ளார்களாம்.

ஷூட்டிங்கில் பிசி...
இருவரும் தற்போது தங்களது படப்பிடிப்புகளில் பிசியாக இருப்பதால் விரைவில் தங்களுக்கேற்ற மாதிரி அந்த வீட்டை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிச்சன் பொருட்கள்...
ஏற்கனவே பட வேலையாக தென்னாப்பிரிக்கா சென்றிருந்த போது கத்ரீனா சமையலறைக்குத் தேவையான பொருட்களை பை நிறைய வாங்கி வந்து வைத்துள்ளாராம்.

பாந்த்ராக்காரர்கள்...
ஏற்கனவே பாந்த்ரா பகுதியில் சல்மான்கான், ஷாருக்கான் மற்றும் அமீர்கான் உள்ளிட்ட பாலிவுட் ஸ்டார்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், இந்த ரூ.20 கோடி வீட்டில் குடியேறுவதன் மூலம் இவர்களும் பாந்த்ராக்காரர்களாகப் போகிறார்கள்.
பார்த்துப் பாந்தமாக இல்வாழ்க்கையை ஆரம்பிங்க!


Click it and Unblock the Notifications