பிரபுதேவா பட ஷூட்டிங்கில் விபத்து: வில்லன் நடிகர் படுகாயம்!
சல்மான் கான் நடிக்கும் ’தபாங் 3’படத்தை இயக்கி முடித்திருக்கிறார் பிரபுதேவா. சோனாக்ஷி சின்ஹா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படம், வரும் 20 தேதி ரிலீஸ் ஆகிறது. இதையடுத்தும் சல்மான் கானை மீண்டும் இயக்குகி
சல்மான் கான் நடிக்கும் 'தபாங் 3'படத்தை இயக்கி முடித்திருக்கிறார் பிரபுதேவா. சோனாக்ஷி சின்ஹா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படம், வரும் 20 தேதி ரிலீஸ் ஆகிறது. இதையடுத்தும் சல்மான் கானை மீண்டும் இயக்குகிறார் பிரபுதேவா.
ராதே: யுவர் மோஸ்ட் வான்டட் பாய் - என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், திஷா பட்டானி ஹீரோயின். நம்ம ஊர் பரத், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஜாக்கி ஷெராப், ரன்தீப் ஹூடா, மேகா ஆகாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இது, த அவுட்லாஸ் என்ற கொரிய சினிமாவைத் தழுவி எடுக்கப்படும் படம். படத்துக்காக, கொரிய ஸ்டன்ட் இயக்குனர் ஒருவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் மும்பையில் வேகமாக நடந்து வருகிறது. இதில் சல்மான் கானும் ரன்தீப்பும் மோதும் காட்சி, கடந்த 2 நாட்களுக்கு முன் படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராமல் நடந்த விபத்தில் ரன்தீப் படுகாயமடைந்தார்.
இதையடுத்து அவர், மும்பையில் உள்ள கோகுலா திருபாய் அம்பானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ரன்தீப், காயம் காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











