"RangDe" படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது... புகைப்படத்தை வெளியிட்டார் கீர்த்தி சுரேஷ்!
ஹைதராபாத் : குட்லக் சகி, மிஸ் இந்தியா, அண்ணாத்தே என கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்பொழுது தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பையும் சத்தமில்லாமல் முடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றதை அடுத்து இப்போது பல்வேறு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
கொரானா அச்சத்தால் படப்பிடிப்புகளை குறைந்த அளவு நபர்களுடன் தகுந்த பாதுகாப்புடன் படப்பிடிப்பை தொடங்கலாம் என அனுமதி அளித்திருந்ததையடுத்து இப்பொழுது அவர் நடித்து வந்த தெலுங்கு படத்தில் படப்பிடிப்பை சத்தமில்லாமல் இந்த ஊரடங்கில் முடித்த கையோடு படக்குழுவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார்.

வெற்றி பெற்றதை
தெலுங்கில் இளம் நடிகராக வலம் வரும் நடிகர் நிதின் நடிப்பில் சமீபத்தில் வெளியான "பீஷ்மா" திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வெற்றி பெற்றதை அடுத்து இவரது அடுத்த திரைப்படமான RangDe திரைப்படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.

கொரானா பரவல்
கீர்த்தி சுரேஷ், நிதின் இணைந்து நடித்திருக்கும் இத்திரைப்படத்தின் படிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில் இது ரொமாண்டிக் காதல் திரைப்படமாக உருவாகியுள்ளது. எனினும் இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பான்மையும் முடிவடைந்த நிலையில் ஒரு சில காட்சிகளை மட்டுமே எடுக்க வேண்டிய சமயத்தில் கொரானா பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

சத்தமில்லாமல் முடிந்தது
பாதுகாப்பு நலன் கருதி கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கும் மேலாக எந்த ஒரு படபிடிப்பும் நடத்த அனுமதி கிடைக்காமல் இருந்த நிலையில், குறைந்த அளவிலான பணியாளர்களை வைத்து படப்பிடிப்பை தொடங்கலாம் என அரசு கூறியதை தொடர்ந்து சத்தமில்லாமல் கீர்த்தி சுரேஷ் தனது தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார்.

RangDe
RangDe படத்தின் படப்பிடிப்பு முடிந்த மகிழ்ச்சியோடு கீர்த்தி சுரேஷ், நிதின், இயக்குனர் அட்லுரி வெங்கி, தயாரிப்பாளர் நாக வம்சி என அனைவரும் இணைந்து எடுத்துக்கொண்ட மகிழ்ச்சியான புகைப்படத்தை நிதின் மற்றும் கீர்த்தி சுரேஷ் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு RangDe படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து விட்டது என்ற மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுக்கு கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











