Vijay: விவரம் தெரியாத குழந்தைகளிடம் ஓட்டு கேட்க ஆரம்பித்த விஜய்... விளாசிய ரங்கராஜ் பாண்டே

சென்னை: தமிழக கட்சி கழகத்தின் தலைவர் ஆன நடிகர் விஜய் தனது கடைசி கட்ட பிரச்சாரத்தில் பேசியது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதே நேரத்தில் அரசியல் தரத்தில் அவரது வீடியோக்கள் அதாவது அவரது பேச்சுக்கு விமர்சனங்களும் பதில்களும் மறுப்புகளும் என தொடர்ந்து வந்து கொண்டே உள்ளது. இந்நிலையில் அவர் குழந்தைகளிடம் ஓட்டு கேட்டது தொடர்பாக மூத்த பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.

விஜய் தனது கடைசி கட்ட பிரச்சார உரையில், கரூர் துயரச் சம்பவத்திற்கும் தனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார். பேசிய வீடியோக்கள் தனிப்பட்ட முறையில் பேசியது சட்டசபையில் பேசியது உள்ளிட்ட வீடியோக்களை பகிர்ந்து விஜய் அப்பட்டமாக பொய் சொல்லி வருகிறார் என்று நினைவாசிகள் பலரும் விஜயின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இப்படி இருக்கையில் விஜய் தனது கடைசி கட்ட பிரச்சார உரையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள குழந்தைகளிடம் வாக்கு கேட்பது போல பேசினார் அதாவது குழந்தைகளான நீங்கள் எப்படி உங்களுக்கு சாக்லேட் வேண்டும் என்றால் அடம்பிடித்து சாக்லேட் வாங்குவீர்கள் விஜய் மாமாவுக்கு ஓட்டு போட சொல்லி உங்களது உங்களது அப்பா அம்மா தாத்தா பாட்டி மாமா அத்தை உள்ளிட்ட அனைவரிடமும் அடம் பிடியுங்கள் என்று கூறினார்.

Rangaraj Pandey Criticizes Vijay Over Children Vote Appeal in Campaign Speech
Photo Credit:

ரங்கராஜ் பாண்டே: அவரது இந்த பேச்சுக்கு நெட்டிசன்கள் பலரும் டிரோல் வீடியோக்களை பகிர்ந்து வரும் நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே விஜயின் இந்த பேச்சுக்கு அளித்துள்ள பதிலடி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய் குழந்தைகளிடம் ஓட்டு கேட்கிறார் ஏனென்றால் அவர்களுக்குத் தான் விவரம் தெரியாது, விஜய் மாமா வேண்டும் என்று அடம் பிடிப்பது போல் அடம் பிடிப்பார்கள் என்று தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். ரங்கராஜ் பாண்டேவின் இந்த விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Rangaraj Pandey Criticizes Vijay Over Children Vote Appeal in Campaign Speech
Photo Credit:

பிக்பாஸ் விமர்சகர்: அதேபோல் பிக்பாஸ் செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு இணையத்தில் கவனத்தை ஈர்த்தவரான இம்தாத் தனது எக்ஸ் பக்கத்தில், " உங்கள் குழந்தைகள் சொல்றதுக்காக விஜய்க்கு ஓட்டு போடறதுக்கு முன்னாடி... விஜயின் குழந்தைகள் எந்த பாதையை தேர்வு செய்திருக்காங்கன்னு நினைச்சு ஒரு நிமிஷம் யோசிங்க. அதனை உங்கள் குழந்தைகளுக்கும் புரியவையுங்கள். ஓட்டு ஒரு உணர்ச்சி இல்லை - ஒரு பொறுப்பு" என்று பதிவிட்டுள்ளார். விஜய்யின் இந்த பேச்சுக்கான பதிலடிகள் இணையத்தில் அதிகரித்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X