ரங்கராஜ் பாண்டே தந்தை மறைவு.. நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்.. பிரபலங்கள் இரங்கல்

சென்னை: ஊடகவியலாளரும் நடிகருமான ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ராம்சிங்காஹசன் நேற்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு சென்னையில் உள்ள ரங்கராஜ் பாண்டே இல்லத்தில் இன்று நடைபெற்று வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று ரங்கராஜ் பாண்டேவின் தந்தைக்கு அஞ்சலி செலுத்திய வீடியோ வெளியாகி உள்ளது.

தந்தி டிவியில் தலைமை செய்தியாளராக பணியாற்றி வந்தவர் ரங்கராஜ் பாண்டே. சாணக்யா எனும் யூடியூப் சேனலை தற்போது நடத்தி வருகிறார்.

நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, விஜய்சேதுபதியின் க/பெ. ரணசிங்கம் உள்ளிட்ட சில படங்களில் இவர் நடித்துள்ளார்.

நேர்கொண்ட பார்வை படத்தில்

நேர்கொண்ட பார்வை படத்தில்


போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் நடிகர் அஜித்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வாதாடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்து சினிமாவிலும் அடியெடுத்து வைத்தார் பிரபல ஊடகவியலாளரான ரங்கராஜ் பாண்டேவின் தந்தை நேற்று காலமான செய்தி அறிந்த அரசியல் பிரபலங்கள், நடிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தந்தை மறைவு

தந்தை மறைவு

ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ராம்சிங்காஹன் நேற்று இரவு காலமானார். தனது ட்விட்டர் பக்கத்தில் ரங்கராஜ் பாண்டே, "என் திருத்தகப்பனார் ஶ்ரீ ஶ்ரீ உவே ரகுநாதாசார்யா ராம்சிங்ஹாசன் பாண்டே நேற்று, வைகுண்ட ஏகாதசி, திங்கள் கிழமை, மார்கழி 18, 02.01.2023 இரவு 9:45 மணிக்கு ஆசார்யன் திருவடி அடைந்தார். அன்னாரது காரியங்கள் சென்னையில் செவ்வாய் கிழமை நடைபெற இருக்கின்றன.
- அடியேன் ரங்கராஜ் பாண்டே" என குறிப்பிட்டு ட்வீட் செய்து தந்தையின் மறைவை அறிவித்து இருந்தார்.

ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

சென்னையில் உள்ள ரங்கராஜ் பாண்டே இல்லத்தில் இறுதிச்சடங்கு நடைபெற்று வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக வந்து அஞ்சலி செலுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. தனது காரில் ரஜினிகாந்த் ரங்கராஜ் பாண்டே இல்லத்துக்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தினார்.

ரங்கராஜ் பாண்டேவுக்கு ஆறுதல்

ரங்கராஜ் பாண்டேவுக்கு ஆறுதல்

ரங்கராஜ் பாண்டேவின் கைகளை பிடித்து எதற்கும் கலங்காதீங்க என நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் சொல்லும் காட்சிகளும் வெளியாகி உள்ளன. அரசியல் பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் நடிகர்கள் என பலரும் ரங்கராஜ் பாண்டேவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X