இது எப்ப...? இந்தி சினிமாவில் அறிமுகமாகிறார் ரங்கராஜ் பாண்டே!

By

Recommended Video

Thalaivar 168 New Update | Keerthy Suresh On board | Rajinikanth

சென்னை: பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, இந்தி படத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.

பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிகராக அறிமுகமானார். இதை ஹெச். வினோத் இயக்கியிருந்தார். இந்தி நடிகை வித்யா பாலன், ஸ்ரத்தா ஶ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம் உட்பட பலர் இதில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.

Rangaraj Pandey has been signed for the Hindi movie

போனி கபூரின் ஸீ ஸ்டூடியோஸ் தயாரித்திருந்த இந்தப் படத்தில் சத்யமூர்த்தி என்ற வழக்கறிஞராக நடித்திருந்தார் ரங்கராஜ் பாண்டே. அவர் வேடத்துக்கு வரவேற்புக் கிடைத்தது.

இதையடுத்து அவர், ரஜினிகாந்த் தொடங்கும் அரசியல் கட்சியில் சேரப்போவதாகவும் இது பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறப்பட்டது. ஆனால் அது பற்றி எந்த தகவலும் இல்லை. இந்நிலையில் அவர் மேலும் சில படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே இந்தி படத்திலும் அறிமுகமாகிறார்.

இயக்குனர் சுசிகணேசன், தமிழில் இயக்கிய திருட்டுப் பயலே படத்தை இந்தியில் இயக்கினார். அடுத்து திருட்டுப் பயலே 2 படத்தை தமிழில் இயக்கினார். இந்தப் படமும் தமிழில் வரவேற்பை பெற்றதை அடுத்து, இதையும் இந்தியில் இயக்குகிறார்.

இதில், பாபி சிம்ஹா நடித்த கேரக்டரில் வினீத்குமார் சிங், அமலா பால் கேரக்டரில் ஊர்வசி ராட்டெலா, பிரசன்னா நடித்த அபிஷேக் ஓபராய் நடிக்கின்றனர். லக்னோ மற்றும் வாரணாசியில் இதன் ஷூட்டிங் நடந்துள்ளது. இதில், தமிழில் இயக்குனர் சுசி கணேசன் நடித்த கேரக்டரில் ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். அவர் நடித்த காட்சிகள் லக்னோவில் படமாக்கப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X