விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் படத்துல இவரும் இருக்காராம்.. தயாரிப்பு தரப்பு தகவல்!
சென்னை: க/பெ ரணசிங்கம் படத்தில் ரங்கராஜ் பாண்டே நடித்திருப்பதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் லீடிங் ரோலில் நடித்திருக்கும் படம் க/பெ ரணசிங்கம். இந்தப் படத்தை பெ.விருமாண்டி என்ற அறிமுக இயக்குநர் இயக்கியிருக்கிறார்.
கேஜேஆர் ஸ்டுடியோஸ் படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரங்கராஜ் பாண்டே
இந்தப் படத்தின் ரீரெக்கார்டிங் பணியில் ஈடுபட்ட இசையமைப்பாளர் ஜிப்ரான், விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பை வெகுவாக பாராட்டினார். இந்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பை தனிப்பட்ட முறையில் கண்டதாக ரங்கராஜ் பாண்டே ட்வீட் செய்துள்ளார்.

தனிப்பட்ட முறையில்..
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஜிப்ரானிடமிருந்து கேட்பதில் மகிழ்ச்சி. க/பெ ரணசிங்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் அசத்தல் நடிப்பை தனிப்பட்ட முறையில் பார்த்தேன். எல்லாப் புகழும் பெ. விருமாண்டி மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ்க்கே என பதிவிட்டுள்ளார்.

தனித்து நிற்கும்
ரங்கராஜ் பாண்டேவின் டிவிட்டுக்கு பதில் அளித்திருக்கும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் உங்களுடைய ரோலும் தனித்து நிற்கும் என்று உறுதியாக சொல்வோம். நம் அனைவரின் உழைப்பையும் மக்கள் மக்கள் காணும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம் என பதிவிட்டுள்ளது.

காணாமல் போன கணவர்
க/பெ ரணசிங்கம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷும் விஜய் சேதுபதியும் திருமணமான தம்பதிகளாக நடித்திருப்பதாகவும், காணமல் போன தனது கணவரை ஐஸ்வர்யா ராஜேஷ் தேடுவதாக கதைக்களம் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications