இடுப்பைக் கிள்ளி நடிக்கிறாரு விஜய்ன்னு அண்ணாமலை பேசியிருக்கக் கூடாது.. ரங்கராஜ் பாண்டே பதிலடி!

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக மாறி அரசியல் செய்து வரும் நிலையில், அவரை பாஜக தலைவர் அண்ணாமலை இடுப்பைக் கிள்ளி நடித்துவிட்டு இப்போ வந்து ரூல்ஸ் பேசலாமா என்றும் மாஸ்டர் படத்தில் குடிகாரராக நடித்து விட்டு டாஸ்மாக்குக்கு எதிரான கோஷத்தை விஜய் எப்படி சொல்லலாம் என பேசியது பெரும் விவாதத்தை அரசியல் வட்டாரத்தில் எழுப்பியது.

அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளத்தில் விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். "அர்ஜுனா அர்ஜுனா அம்புவிடு அர்ஜுனா" பாடலுக்கு நடனமாடிய சரத்குமார் மற்றும் நமீதா உங்கள் கட்சியில் தானே உள்ளனர் என்று கலாய்த்து வருகின்றனர்.

Rangaraj Pandey slams Annamalai for cheap criticize against TVK head Vijay

இந்நிலையில், அரசியல் விமர்சகரான ரங்கராஜ் பாண்டே அண்ணாமலை பேசியது தவறு என்றும் சினிமா என்பது அவருடைய தொழில் அதில் எப்படி நடிக்க சொல்கிறார்களோ அப்படி நடிக்க வேண்டியது அவருடைய வேலை அதை அரசியலுடன் கலந்து பேசுவது தவறான விஷயம் என அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் ரங்கராஜ் பாண்டே.

எம்ஜிஆர் நடிகரல்ல: எம்ஜிஆர், ஜெயலலிதா எல்லாம் முன்னணி நடிகர்களாக இருந்து தானே தமிழ்நாட்டை முதலமைச்சர்களாக மாறி ஆட்சி செய்தனர் என்கிற வாதத்தை தவெகவினர் எழுப்பி வரும் நிலையில், எம்ஜிஆர் நடிகர் மட்டுமல்ல, அவர் ஆரம்பத்தில் இருந்தே எம்.எல்.ஏவாக இருந்தவர். பல ஆண்டுகள் அரசியலில் ஊறிக் கிடந்த பின்னர் தான் தனிக்கட்சி ஆரம்பித்து முதலமைச்சர் ஆனார் என்றும் விஜய் தான் 50 வயதில் அரசியலுக்கு வருகிறார் என்றும் அவருக்கு எதிரான கோஷங்களை பாஜகவினர் கிளப்பி வருகின்றனர்.

பாசிசமும் பாயாசமும் பயப்படுது: விஜய்யின் அரசியல் வருகைக்கு எதிராக கொதித்து எழுவது யாரென்றால் பாசிசமும் பாயாசமும் தான் என்றும் திமுகவை சொன்னா பாஜக அண்ணாமலைக்கு ஏன் கோபம் வருகிறது. யாரு யாருடைய பி டீம் என இப்போ புரியுதா என தவெக தொண்டர்கள் சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட ட்ரோல்களை பரப்பி வருகின்றனர்.

Rangaraj Pandey slams Annamalai for cheap criticize against TVK head Vijay

இடுப்பைக் கிள்ளி நடித்தவர்: நடிகைகளின் இடுப்பைக் கிள்ளி நடித்தவர் தான் விஜய் என்றும் மாமியாருக்கு சோப் போடும் காட்சியில் நடித்தது தனக்கு ரொம்பவே ஃபேவரைட்டான காட்சி என விஜய் பேசிய பழைய பேட்டிகளையும் கிளறி பாஜகவினர் வறுத்தெடுத்து வருகின்றனர். பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பின் போது இடுப்பைக் கிள்ளி நடித்தவர் விஜய் என்றும் மாஸ்டர் படத்தில் அவருடைய ரோல் என்ன அவர் எப்படி டாஸ்மாக் எதிர்த்து பேசலாம் என அண்ணாமலை பேசியது பெரும் பரபரப்பை கிளப்பியது.

அண்ணாமலைக்கு ரங்கராஜ் பாண்டே பதிலடி: எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களில் எப்படி எல்லாம் நடித்தார்கள் என்று அண்ணாமலை பேசுவாரா? அதே போலத்தான் நடிப்பு என்பது விஜய்யின் தொழில். அதில், எப்படி நடிக்க இயக்குநர்கள் சொல்கிறார்களோ அப்படி நடிப்பார். அதை கொண்டு வந்து அரசியல் விவாதத்தின் போது பேசி விஜய்யை விமர்சிப்பது சரியான விஷயமில்லை என்றும் 50 வயதில் விஜய் அரசியலுக்கு ஏன் வரவேண்டும் என கேட்கும் அண்ணாமலை 37 வயதில் தானே அரசியலுக்கு வந்தார். கல்லூரி முடித்ததும் ஐபிஎஸ் அதிகாரியாக ஆகாமல் அரசியல்வாதியாக மாற வேண்டியது தானே என்றும் ரங்கராஜ் பாண்டே கேட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X