உங்க நண்பருக்கும், மனைவிக்குமான கள்ளத்தொடர்பு...: நடிகரை விளாசிய நடிகையின் அக்கா
மும்பை: உங்களின் மனைவி உங்கள் நண்பருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக வந்த வதந்திகளை நாங்கள் அனைவரும் படித்துள்ளோம் என்று நடிகை கங்கனாவின் அக்கா நடிகர் ரித்திக்கிடம் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் மனைவியை விவாகரத்து செய்வதற்கு முன்பே நடிகை கங்கனா ரனாவத்துடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கங்கனாவே தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கங்கனா, ரித்திக் இடையே ஒரே சண்டையாக இருக்கிறது.

சண்டை
கங்கனா, ரித்திக் சண்டையில் கங்கனாவுக்கு ஆதரவாக அவரது அக்கா ரங்கோலியும் குதித்துள்ளார். இந்த சண்டை எப்பொழுது ஓயும் என்றே தெரியவில்லை.

போட்டோஷாப்
ரித்திக், கங்கனா நெருக்கமாக இருக்கும் புகைப்படம் போட்டோஷாப் இல்லை. அதில் என் தங்கையை கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பது ரித்திக் ரோஷன் தான் என்று ரங்கோலி தெரிவித்துள்ளார்.

கள்ளத்தொடர்பு
உங்களின் முன்னாள் மனைவி உங்களின் நண்பருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது பற்றிய வதந்திகளை நாங்கள் அனைவரும் படித்துள்ளோம் ரித்திக். ஏன் எப்பொழுது பார்த்தாலும் மனைவிக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறீர்கள்? என்று ரங்கோலி கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரிவு
ரித்திக் ரோஷனும், சூசனும் விவாகரத்து பெற்றுவிட்டனர். சூசனுக்கும் ரித்திக்கின் நெருங்கிய நண்பரான நடிகர் ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால் அவர்கள் விவகாரத்து பெற்றதாக அப்போது பேசப்பட்டது. அதை தான் ரங்கோலி நேரடியாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











