கட்சியில் இருக்கும் போது அக்கா..வெளியேறினால் ஆபாசமா பேசுவீங்களா? விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்

சென்னை: தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்திருக்கிறாரர் அண்மையில் அந்த கட்சிகள் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார். தொடர்ந்து என்னை பற்றி அவதூறு பரப்பி, மிரட்டி வருகின்றனர். ஆனால், இதுவரை தவெக நிர்வாகிகள் இந்த செயலை கண்டிக்காதது ஏன்? தவெகவை பற்றி பெண்கள் எந்த கருத்தை கூறினாலும், அவர்களை மிரட்டுவதையே வேலையாக சிலர் செய்து வருகின்றனர். இதுபோன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என ரஞ்சனா நாச்சியார் பேசி உள்ளார்.

மனைவி சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில் விஜய், திரிஷாவுடன் திருமணத்திற்கு வந்தது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து மகாபலிபுரத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பேசிய விஜய், இப்போது நடந்து வரும் பிரச்சனையை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் அது குறித்து கவலைப்பட வேண்டாம். அந்த அளவுக்கு அது வொர்த் இல்லை எனக் கூறியிருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு தவெக பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார், 25 ஆண்டுகாலம் வாழ்ந்த மனைவி 'வொர்த் இல்லையா' என கேட்டு விஜயின் செயலை கண்டித்ததோடு மட்டுமில்லாமல் தமிழக வெற்றிக் கழகம் கட்சியிலிருந்து விலகி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கடந்த மார்ச் 19ஆம் தேதி திமுகவில் இணைந்தார்.

Vijay TVK Ranjana

ரஞ்சனா நாச்சியார்: இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து வெளியேறியதில் இருந்து தனக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதால், தவெக தலைவர் விஜய் மீது வழக்கு பதிவு செய்ய கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய இவர், கடந்த வாரம் தமிழக வெற்றிக்கழகம் கட்சியிலிருந்து வெளியேறி திமுகவில் இணைந்து இருக்கிறேன். தவெகவில் இருந்து வெளியேறிய நாள் முதல் தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மூலமாக மிரட்டி வருகின்றனர். இப்படி மிரட்டுபவர்கள் அனைவரும் கட்சியின் கொடி, விஜய்யின் போட்டோவை வைத்துத்தான் மிரட்டி வருகிறார்கள்.

புகார் மனு: இப்படி மிரட்டுவர்களை கட்சிகள் நிர்வாகிகளோ அல்லது கட்சியின் தலைவர் விஜயோ கண்டனம் தெரிவித்தோ, கட்சிக்கும் இவர்களுக்கும் எந்த விதமான சம்பந்தம் இல்லை என்றோ கூறவில்லை. தவெகவில் இருந்து வெளியே வந்தாலே அவர்களை மிரட்ட வேண்டும் என்ற ஒரு கலாச்சாரத்தை முன்வைத்து சிலர் இது போன்ற விஷயத்தை செய்து வருகின்றனர். தவெகவில் இருந்தே வெளியேறினால் அல்லது தவெக குறித்து எந்த கருத்துக்களை முன் வைத்தாலும் அவர்களின் தனிப்பட்ட விஷயம் குறித்து அவதூறுகளை பரப்புவதை சிலர் செய்து வருகின்றனர். நான் தவெகவில் இருக்கும் வரை அக்காவாக தெரிந்தேன், வெளியே வந்தவுடன் ஆபாசமாக கருத்துக்களை பதிவிடுவது எந்த வகையில் நியாயம், இதை தவெகவும் இதுவரை கண்டு கொள்ளாமல் இருக்கிறது என ரஞ்சனா நாச்சியார் பேட்டி அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X