பா. ரஞ்சித்தின் பாலிவுட் என்ட்ரி! அமீர்கானை இயக்குகிறாரா?
Recommended Video

சென்னை: இயக்குனர் ரஞ்சித் இயக்கும் அடுத்த படம் பற்றிய சுவாராஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் பா.ரஞ்சித். இயக்குனர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்து பல திறமைசாலிகளை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தி வருகிறார்.

ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகியுள்ள பரியேறும் பெருமாள் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பலரும் இப்படத்தையும், இதை தயாரித்ததற்காகவும் ரஞ்சித்தையும் பாராட்டி வருகின்றனர். கமல் ஹாசன் கூட நேரில் அழைத்து பாராட்டினார்.
காலா திரைப்படத்திற்கு பிறகு ரஞ்சித் ஒரு இந்திப் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. 18ஆம் நூற்றாண்டில் சமூக நீதிக்காக போராடியவர்களை மையப்படுத்தி இப்படம் தயாராக உள்ளது.
இப்படத்தில் அகில இந்திய அளவில் உள்ள மிகப் பெரிய நடிகர்கள் நடிக்க உள்ளனர். ஆமீர் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. யார் யாரெல்லாம் நடிக்க உள்ளனர் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
இப்படத்தை நமா பிச்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பாலிவுட் நகரமான மும்பையின் தாராவியை மையப்படுத்தி காலா படம் எடுத்த ரஞ்சித், தற்போது பாலிவுட்டில் படம் பண்ண தயாராகிவிட்டார்.


Click it and Unblock the Notifications











