என்ன பார்த்தா எமோஷனல் முட்டாள் மாதிரி இருக்கா.. கதறி அழுத ஜாக்குலின்.. ரஞ்சித் பண்ண தரமான சம்பவம்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல் மிக்சர் சாப்பிடும் போட்டியாளர்களை கடந்த சில சீசன்களாக போட்டு போர் அடிக்க வைத்த நிலையில், தற்போது ரசிகர்களை என்டர்டெயின் பண்ண நல்லா டிராமா ட்ரூப் கம்பெனி ஆர்ட்டிஸ்ட்களை களம் இறக்கினால் தான் தப்பிக்க ஒரே வழி என நினைத்த பிக் பாஸ் டீம் ஏகப்பட்ட சீரியல் நடிகர்களை உள்ளே இறக்கியுள்ளது.
அதிலும் ரஞ்சித் எல்லாம் பல ஆண்டுகளாக சினிமா மற்றும் சீரியலில் நடித்த நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தர் ரஞ்சித் உடன் சேர்ந்துக் கொண்டு சண்டை போடுவது போல போட்ட பிராங்க் ஜாக்குலின் உள்ளிட்ட பெண் போட்டியாளர்களை கடுப்பின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது.

பிரியங்கா போல முதல் நாளில் இருந்தே ஸ்கோர் செய்து ஜாக்குலின் கோப்பையை தட்டிப் பறிக்கலாம் என நினைத்த நிலையில், அவருக்கே செக் வைக்கும் விதமாக ரஞ்சித் வெறித்தனமாக விளையாட்டை ஆரம்பித்த நிலையில், ஓட்டுக்கள் எல்லாம் அவருக்கு போய் தப்பித்து விடுவாரே என்கிற ஓட்டங்கள் மனதுக்குள் ஓடியதும் அழுது புலம்ப ஆரம்பித்து விட்டார் ஜாக்குலின்.
பாலாஜி முருகதாஸ் கமெண்ட்: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்று ரன்னர் அப் ஆன பாலாஜி முருகதாஸ் சிம்பு தொகுத்து வழங்கிய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் டைட்டிலையும் வென்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தீவிரமாக பார்த்து வரும் பாலா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் "ஓ இது பிராங்கா" என ட்வீட் போட்டுள்ளார். அந்தளவுக்கு ரஞ்சித் கடைசி வரை தனது நடிப்பு திறமையை காட்டி ஒட்டுமொத்த வீட்டை மட்டுமின்றி ரசிகர்களையும் மிரள வைத்துள்ளார்.

ராஜபார்ட் ரங்கதுரை ரஞ்சித்: பிக் பாஸ் வீட்டில் ரவீந்தர் மற்றும் ரஞ்சித் இருவரும் அடிதடி சண்டை போடுவது போல ப்ரோமோவில் போடும் போதே அது ஃபேக் என சில ரசிகர்கள் கண்டு பிடித்து சொன்ன நிலையில், பல ரசிகர்கள் 8 சீசன்களை பார்த்தும் பிராங்க் டிராமாவை நம்பி ஏமாந்து போகும் அளவுக்கு ராஜபார்ட் ரங்கதுரை போல நடிப்பில் மிரட்டி விட்டார் ரஞ்சித்.
எமோஷனல் முட்டாள் ஜாக்குலின்: பிக் பாஸ் வீட்டில் நடந்த சண்டைக்குப் பிறகு ரஞ்சித் வாந்தி எடுப்பது போன்றெல்லாம் நடிப்பின் உச்சிக்கே சென்ற நிலையில், போட்டியாளர்கள் பயந்து போய் விட்டனர். ஆனால், அதெல்லாம் பிராங்க் என தெரிந்த பின்னர் ஜாக்குலின் கதறி அழுது என்னை பார்த்தா என்ன எமோஷனல் முட்டாள் மாதிரி தெரியுதா? என புலம்பித் தவித்து வருகிறார்.
வெளியேறப்போவது யாரு?: ரஞ்சித்தின் பர்ஃபார்மன்ஸ் ரசிகர்களை வேறலெவலில் என்டர்டெயின் செய்த நிலையில், அவருக்கான ஆர்மியே உருவாகி விட்டது. ஆஃப் லைனில் ஓட்டிங்கும் அவருக்கு அதிகரித்து வருகிறது. இதுவரை செளந்தர்யாவுக்கு அதிக வாக்குகளும் அவரை தொடர்ந்து முத்துக்குமார், ரஞ்சித்துக்கு வாக்குகள் அதிகரித்துள்ளன. டேஞ்சர் ஜோனில் அருண் பிரசாத், ஜாக்குலின் மற்றும் ரவீந்தர் உள்ளனர். கடைசி இடத்தில் ஜாக்குலின் மற்றும் ரவீந்தர் உள்ள நிலையில், முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேறுவாரா? அல்லது ஜாக்குலின் வெளியேறுவாரா என்கிற கேள்விகள் அதிகரித்துள்ளன. விஜய் டிவி எப்படியும் ஜாக்குலினை காப்பாற்றும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











