கபாலிக்கு அடுத்து சூர்யாவை இயக்கும் ரஞ்சித்!
இரண்டே படங்களில் உச்சத்தைத் தொட்டுவிட்டார் ரஞ்சித். கபாலியில் சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கியதன் மூலம் கோடம்பாக்கத்தின் ஆச்சர்யக்குறியாகிவிட்டார்.
இப்படத்தையடுத்து கார்த்தி, சூர்யாவை வைத்து ரஞ்சித் படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. ‘மெட்ராஸ்' படத்தில் ஏற்கனவே கார்த்தியுடன் பணியாற்றிய ரஞ்சித், அவரிடம் ஒருவரிக் கதை ஒன்றை கூறிவிட்டதாகவும் அதற்கு கார்த்தி சம்மதித்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.

அந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கவிருந்த நேரத்தில்தான், ரஜினியிடமிருந்து ரஞ்சித்துக்கு அழைப்பு வர, அந்தப் படத்துக்காக விட்டுக் கொடுத்தது ஸ்டுடியோ கிரீன்.
இப்போது கபாலி முடிந்துவிட்டது. விரைவில் வெளியாகவிருக்கிறது.
இந்த நிலையில் சூர்யாவுக்கு ஏற்ற கதை ஒன்றை ரஞ்சித் தயார் செய்திருக்கிறாராம்.
ஏற்கெனவே சொன்ன கதையில் கார்த்தியையோ அல்லது புதிய கதையில் சூர்யாவையோ அவர் இயக்குவார் என்கிறார்கள். இருவரில் யார் நடித்தாலும், அதை ஸ்டுடியோ கிரீன்தான் தயாரிக்கப் போகிறது.


Click it and Unblock the Notifications











