3 புதிய இயக்குனர்களுடன் களம் இறங்கும்… பா.இரஞ்சித்

சென்னை : 5 புதிய படங்களை தயாரிக்க இருப்பதாக பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார். இதில் 3தயாரிப்பு நிறுவனங்கள் 3 புதிய இயக்குனர்கள் 2 வெற்றி இயக்குனர்களும் களத்தில் இறங்க உள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.

இயக்குனர் பா.இரஞ்சித் சிறந்த தயாரிப்புகளை நீலம் தயாரிப்பின் மூலம் கொடுத்து வருகிறார். அவர் தயாரித்த பரியேறும் பெருமாள் மற்றும் இரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டுள்ளது.

Ranjith’s produce 5 new films.

குண்டு படம் வெற்றி பெற்றதையடுத்து பா.இரஞ்சித் தனது அடுத்த முயற்றியில் இறங்கி உள்ளார் . கோல்டன் ரேசியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டல் ரெட் கார் பிலிம்ஸ் மற்றும் நீலம் தயாரிப்பு இணைந்து 5 புதிய படங்களை தயாரிக்க இருப்பதாக அவர் தெரிவித்தார். அதற்கான ஊடக சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது, அதில், அந்த 5 இயக்குனர்களையும் பா.இரஞ்சித் அறிமுகப்படுத்தினார்.

பரியேரும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் தற்போது தனுஷ் படம் ஒன்றை இயக்க உள்ளார் அதன் பிறகு 2020ல் இந்த மூன்று தயாரிப்பு நிறுவனங்களின் கீழ் பணியாற்ற உள்ளார் .

இதற்கடுத்து இயக்குனர் லெனின் பாரதி இவர் விஜய் சேதுபதி தயாரிப்பின் கீழ் மேற்கு தொடர்சிமலை படத்தை இயக்கியவர் இவரும் ஒரு முக்கிய படத்தை இயக்க உள்ளார் .

அடுத்ததாக மூன்று புதிய இயக்குனர்கள் களம் இறங்குகிறார்கள் அகிரன் மோசஸ் பிராங்கிளின் மற்றும் சுரேஷ் மாரி ஆகியோர். லிட்டில் ரெட் கார் பிலிம்ஸின் அதிதி ஆனந்த அப்போது பேசினார். நான் பா.இரஞ்சித்தின் மிக பெரிய ரசிகன் நான் இவருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார் மேலும் கோல்டன் ரேசியோ பிலிம்ஸ் சிங்கப்பூரில் இருந்து படங்களை வினியோகிஸ்தம் செய்வது மற்றும் படங்களை தயாரித்தும் இருக்கிறது இந்த நிறுவனம்.

பா.இரஞ்சித்தின் இந்த புதிய முயற்றியை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இவரது தயாரிப்பில் அடுத்தடுத்து 5 படங்கள் வர இருப்பது பெருமகிழ்ச்சி என்று பலரும் தெரிவிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X