நித்தியானந்தாவுடன் ரஞ்சிதா.. அறிமுகப்படுத்திய பாரதிராஜாவின் ரியாக்‌ஷன் இதுதான்.. சகோதரர் ஓபன் டாக்

சென்னை: நடிகை ரஞ்சிதா தமிழ் சினிமாவில் 90களில் ஃபேமஸான நடிகையாக வலம் வந்தார். அப்போது டயர் 2, 3 ஹீரோக்களாக வலம் வந்த சத்யராஜ், கார்த்திக் உள்ளிட்டோருடன் நடித்த அவர் ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கினார். சீரியல்களிலும் நடித்த அவர் ஒருகட்டத்தில் நித்தியானந்தாவுடன் அவர் இருந்த வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போதும் நித்தியானந்தாவின் கைலாசாவில் அவர் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் ரஞ்சிதா பற்றி பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார்.

நடிகை ரஞ்சிதா தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். பாரதிராஜா இயக்கத்தில் கார்த்திக் ஹீரோவாக நடித்த நாடோடி தென்றல் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். பாரதிராஜாவின் அறிமுகம் என்றால் அவர்களுக்கு கண்டிப்பாக திறமையிருக்கும் என்பதை இவரும் உணர்த்தினார். அப்படத்துக்கு பிறகு பொண்டாட்டி ராஜ்ஜியம், வால்டர் வெற்றிவேல், அமைதிப்படை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

சீரியலிலும் ரஞ்சிதா: தொடர்ந்து பிஸியாக இருந்த அவருக்கு திடீரென வாய்ப்புகள் திரைத்துறையில் குறைந்தன. அந்த சூழலில் பாரதிராஜா தனியார் தொலைக்காட்சியில் தெக்கித்தி பொண்ணு என்ற சீரியலை இயக்கினார். அதில் நெப்போலியன், ரஞ்சிதா உள்ளிட்டோரும் நடித்திருந்தார்கள். ஒருகட்டத்தில் சீரியலிலிருந்தும் ஒதுங்கிவிட்டார். அதனையடுத்து ராவணன் படத்தில் மட்டும் கேரக்டர் ரோலை ஏற்றிருந்தார்.

Ranjitha Nithyananda Controversy Bharathiraja s Brother Shares Untold Story
Photo Credit:

நித்தியானந்தாவுடன் தொடர்பு: சூழல் இப்படி இருக்க கடந்த 2010ஆம் ஆண்டு நித்தியானந்தாவுடன் தனியறையில் ரஞ்சிதா நெருக்கமாக இருந்த வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று அவர் தொடர்ந்து கூறினார். ஆனாலும் அதை நம்புவதற்கு தயாராக இல்லை. அந்த வீடியோ ரஞ்சிதாவின் வாழ்க்கையையே ஒட்டுமொத்தமாக மாற்றிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

கைலாசா பிரதமர் ரஞ்சிதா: தொடர்ந்து நித்தியானந்தாவுடன் ஆன்மீக பயணத்தில் இருந்த அவர்; இங்கே நித்தியின் உடைமைகளுக்கும், நித்திக்கும் சட்ட சிக்கல்கள் ஏற்பட கைலாசாவுக்கு சென்றுவிட்டார்கள். அந்த நாட்டுக்கு ரஞ்சிதாவை பிரதமராக நியமித்தார் நித்தியானந்தா. எப்படியும் நித்தியானந்தாவை பிடித்துவிட சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் நடந்தாலும்; அந்த நாடு எங்கே இருக்கிறது என்று தெரியாததால் அதில் முட்டுக்கட்டை நிலவிவருகிறது.

பாரதிராஜா சகோதரர் பேட்டி: இந்நிலையில் நித்தியானந்தாவுடன் ரஞ்சிதா போனபோது பாரதிராஜாவின் ரியாக்‌ஷன் என்னவாக இருந்தது என்பது பற்றி சகோதரர் ஜெயராஜ் சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார். தனியார் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், "பாரதிராஜாவிடன் இயக்கத்தில் உருவான தெக்கித்தி பொண்ணு சீரியலில் ரஞ்சிதா நடித்துக்கொண்டிருந்தார். திடீரென அவர் ஒருநாள் ஷூட்டிங்கிற்கு வரவில்லை. எங்கே அவர் என தேடிக்கொண்டிருந்தோம். அவருக்கு பதிலாக இன்னொருவரையும் நடிக்க வைக்க முடியாத சூழல். அப்போதுதான் அவர் நித்தியானந்தாவுடன் சென்றுவிட்டதாக எங்களுக்கு தகவல் வந்தது. உடனே என் சகோதரர் பாரதிராஜா,'நித்தியானந்தாவுடன் ஆன்மீகத்தில் போயிட்டாங்க போல. சரி ரைட்டு விடு' என சொல்லி; அந்த கேரக்டரை கொஞ்சம் கொஞ்சமாக நாடகத்திலிருந்து மறைத்துவிட்டார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X