நித்யானந்தாவுடன் உல்லாசம்-ரஞ்சிதா மீது நடவடிக்கை கோரி வழக்கு

சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சி.மனோகரன் இன்று ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில்,
ஆன்மீகப் பணிகளில் பிரபலமான நித்யானந்தா சாமியாருடன் பிரபல நடிகை ரஞ்சிதா படுக்கையில் இருந்த வீடியோ காட்சிகள் வெளியாயின. நித்யானந்தாவுடன் ரஞ்சிதா இருக்கும் படங்கள் பத்திரிகைகளிலும் வெளியானது.
இது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது போன்ற ஆபாச காட்சிகள் மக்கள் மனதை கெடுக்கக் கூடியதாகும்.
இளைய தலைமுறையினரும், பெண்களும் சமுதாய சீரழிவில் சிக்கிவிட இது காரணமாக அமையலாம். எனவே ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட நடிகை ரஞ்சிதா மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் கடந்த மாதம் தபால் மூலம் புகார் கொடுத்தேன்.
ஆனால், போலீஸ் கமிஷனர் என் மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நடிகை ரஞ்சிதா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











