twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வைரல் வீடியோவால் 8 ஆண்டுகள் கழித்து பாடகியை சந்தித்த மகள்

    By Siva
    |

    Recommended Video

    Viral Video : மூதாட்டியின் இனிமையான குரல் | Old woman Singing Bollywood song

    மும்பை: பாடகி ரணு மோண்டல் 8 ஆண்டுகள் கழித்து தனது மகளை சந்தித்துள்ளார்.

    மேற்கு வங்க மாநிலம் ரனகாட் ரயில் நிலையத்தில் அமர்ந்து லதா மங்கேஷ்கர் பாடிய பாடலை அழகாக பாடிய மூதாட்டி ரணு மோண்டலின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

    Ranu Mondal meets daughter after 8 years

    அந்த வீடியோவை பார்த்து பாலிவுட் இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மய்யா தனது படத்தில் ரணுவை ஒரு பாடல் பாட வைத்துள்ளார். ரணு தன் படத்திறாக பாட்டு பாடியபோது அதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ஹிமேஷ்.

    இருக்க இடமின்றி இருந்த ரணுவுக்கு பாலிவுட் நடிகர் சல்மான் கான் ரூ. 55 லட்சத்திற்கு வீடு வாங்கிக் கொடுத்துள்ளார் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ரணு தனது மகள் ஸ்வாதியை 8 ஆண்டுகள் கழித்து சந்தித்துள்ளார்.

    ரணு தனது மகளை 8 ஆண்டுகளாக பார்த்ததும் இல்லை, பேசியதும் இல்லை. இந்நிலையில் அம்மா பெரிய பிரபலமாகிவிட்டதை பார்த்த ஸ்வாதி அவரை சந்தித்துள்ளார். அந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன.

    Saaho Review : பிரபாஸ், பிரம்மாண்டம், மாஸ் ஆக்‌ஷன்.. ஓஹோ இல்லை இந்த சாஹோ..! - விமர்சனம்Saaho Review : பிரபாஸ், பிரம்மாண்டம், மாஸ் ஆக்‌ஷன்.. ஓஹோ இல்லை இந்த சாஹோ..! - விமர்சனம்

    தனது புது வாழ்க்கை குறித்து ரணு கூறியதாவது,

    நான் சும்மா பாடிக் கொண்டிருந்தேன். ஆனால் தற்போது எனக்கு முறையே பயிற்சி அளித்து படத்தில் பாட வைத்துள்ளார்கள். ஹிமேஷ்ஜி என்னை தன் குடும்பத்தில் ஒருத்தியாக பார்த்தார். நான் நினைத்துக் கூடப் பார்க்காத வாய்ப்பை அளித்துள்ளார். என் கனவு நினைவானதற்காக கடவுளுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

    எனக்கு சிறு வயதில் இருந்தே பாசம் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது பலரும் என்னிடம் அன்பாக நடந்து கொள்வதை பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறது. பாலிவுட் படத்தில் பாடுவேன் என்று நான் கனவில் கூட நினைத்தது இல்லை. ஆனால் அது நடந்துவிட்டது என்றார்.

    English summary
    Social media sensation Ranu Modal has met her daughter Swati after eight long years.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X