ப்பா.. என்னா மேக்கப்.. லோ பட்ஜெட்.. முடியலடா சாமி.. பாடகியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

Recommended Video

நான் இப்போ செலிபிரிட்டி.. என்னை எப்படி தொட்டு பேசலாம்

மும்பை: ஃபுல் மேக்கப்பில் சுற்றி வரும் திடீர் பாடகி ராணு மோண்டாலை நெட்டிசன்ஸ் வச்சு செய்து வருகின்றனர்.

ராணு மோண்டால் கடந்த சில நாட்களாக செய்திகளில் அடிக்கடி அடிபடும் பெயராக உள்ளது. 50 வயது மதிக்கத்தக்க ராணு மோண்டால் மேற்குவங்க மாநிலம் நாடியா ரயில் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தி பாடல்களை பாடி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்படி அவர் பாடிய பாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதாவது பிரபல பாடகியான லதா மங்கேஷ்கர் பாடிய 'ஏக் பியார் கா நக்மா ஹே' என்ற இந்தி பாடலை பாடியிருந்தார் ராணு. அவரது குரல் லதா மங்கேஷ்கரின் குரலோடு ஒத்துப்போவதாக இருந்தது.

ஓவர் நைட்டில் பிரபலம்

ஓவர் நைட்டில் பிரபலம்

இந்த பாடல் ஃபேஸ்புக் டிவிட்டர் என பரவியதால் ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார் ராணு மோண்டால். அவரது பாடலை கேட்ட சங்கர் மகாதேவன், அந்தப் பெண்ணுக்கு தான் இசையமைக்கும் பாலிவுட் படத்தில் பாடல் பாட வாய்ப்பு தந்தார்.

பாடும் வாய்ப்பு

இதனை தொடர்ந்து அவருக்கு பாலிவுட் படங்களில் பாடுவதற்கான வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன. இதனால் ராணுவின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது. பொது இடங்களில் ராணுவை பார்க்கும் மக்கள் அவருடன் செல்பி எடுக்க ஆசைப்படும் அளவுக்கு உயர்ந்துவிட்டார் ராணு.

தொட்டு பேசக்கூடாது

தொட்டு பேசக்கூடாது

அண்மையில் ஷாப்பிங் சென்ற அவரை பார்த்த சிலர் அவருடன் போட்டோ எடுக்க ஆசைப்பட்டனர். அதற்காக பெண் ஒருவர் அவரை தொட்டு அழைத்துவிட்டார். இதனால் கடுப்பான ராணு, நான் இப்போது பிரபலம் என்னை தொட்டு பேசக்கூடாது என எச்சரித்தார்.

ஒரே நாளில் டேமேஜ்

ஒரே நாளில் டேமேஜ்

இந்த வீடியோ வைரலாகி ஒரே நாளில் டேமேஜ் ஆனார். அந்த வீடியோவை பார்த்த பலரும் இது என்ன ராணுவுக்கு வந்த வாழ்க்கை என கடிந்து கொண்டனர். அதுதொடர்பான செய்திகளே இன்னும் ஓயாத நிலையில் அவரது போட்டோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

ஓவர் மேக்கப்

ஓவர் மேக்கப்

அதாவது சுடிதார் அணிந்துள்ள ராணு, அந்த உடைக்கு மேட்ச்சாக அணிகலன்களை அணிந்திருக்கிறார். அதோடு ஃபுல் மேக்கப்பில் லிப்ஸ்டிக், மஸ்காரா, காஜல், கர்லி ஹேர் என ஆளே வேற மாதிரி உள்ளார்.

லோ பட்ஜெட்

இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த நெட்டிசன்கள், லோ பட்ஜெட் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மேக்கப் போட்டால் இப்படிதான் இருக்கும் என்றும், மேக்கப் போடாமலேயே இருந்திருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பெட்டர்தான்

மேலும் சிலர் ஸ்டேஷனில் இருந்த ஆன்ட்டி, ஆன்ட்டி என்று கூறியதால் 4 வயது சிறுவனை திட்டிய நடிகை ஸ்வரா ஆன்ட்டியை விட பெட்டராதான் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளனனர்.

போட்டோஷாப்பா?

போட்டோஷாப்பா?

ஆனால் இந்த போட்டோ ஒரிஜினல் போட்டோவா அல்லது யாரேனும் போட்டோஷாப் செய்து இணையத்தில் வலம் வர வைத்துள்ளனரா என்று தெரியவில்லை. ஆனால் எந்த சமூக வலைதளத்தால் ராணு மோண்டால் இந்த பேரும் புகழும் பெற்றாரோ அதே சமூக வலைதளத்தால் நாளுக்கு நாள் டேமேஜ் ஆகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X