தீபிகாவுக்கு ஆதரவாக டிவிட்டரில் 'வாய்ஸ்' கொடுக்கும் பாலிவுட்!
மும்பை: தனக்கு மார்பகமும் உள்ளது, கிளீவேஜும் உள்ளது என்று நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளதற்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பிரபல ஆங்கில நாளிதழ் நடிகை தீபிகா படுகோனே லோ கட் ஆடை அணிந்தது குறித்து செய்தி வெளியிட்டது. இதை பார்த்த தீபிகா நான் பெண். எனக்கு மார்பகமும் உள்ளது, கிளீவேஜும் உள்ளது. அதில் உங்களுக்கு பிரச்சனையா என்று ட்விட்டரில் விளாசினார்.
இதை பார்த்த பாலிவுட் பிரபலங்கள் பலர் தீபிகாவுக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளனர்.

ரன்வீர் சிங்
தீபிகா படுகோனே, அவர்களுக்கு சரியான வழியை காண்பித்துள்ளீர் என்று ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.

அர்ஜுன் கபூர்
புதிய கீழ்த்தரமானதை பார்த்துள்ளோம். பெண்களை பாராட்டுவது இருக்கட்டும் முதலில் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள் என்று அர்ஜுன் கபூர் தெரிவித்துள்ளார்.

பிரியங்கா
வெல் டன் தீபிகா. நம் அனைவருக்காகவும் ஒரு நிலையை எடுத்துள்ளீர்கள் என்று பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

இஷா குப்தா
அருமையாக சொன்னீர்கள் தீபிகா. உங்களை நினைத்து பெருமையாக உள்ளது. இதை செய்ததற்கு நன்றி... பெண்கள் சக்தி என்று இஷா குப்தா தெரிவித்துள்ளார்.

நாளிதழ்
உங்களை பாராட்டத் தான் செய்தோம். நீங்கள் சூப்பராக இருந்தீர்கள் அதை அனைவருக்கும் தெரிவிக்க தான் செய்தி வெளியிட்டோம் என்று அந்த நாளிதழ் ட்வீட் செய்துள்ளது.

கரண் ஜோஹார்
அவமரியாதையை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். தீபிகா மட்டும் அல்ல வேறு எந்த பெண்ணும் இந்த நிலையை பொறுத்துக்கொள்ளக் கூடாது என்று இயக்குனர் கரண் ஜோஹார் தெரிவித்துள்ளார்.

தியா மிர்சா
நன்றி தீபிகா படுகோனே...மரியாதை என்று தியா மிர்சா தெரிவித்துள்ளார்.

ஃபரா கான்
நீங்கள் உங்கள் வாழ்க்கையின் ஹீரோயினாக இருங்கள், பாதிக்கப்பட்டவராக அல்ல. அதை தான் தீபிகா செய்துள்ளார் என்று இயக்குனர் ஃபரா கான் தெரிவித்துள்ளார்.

போமன் இரானி
ஒரு பெண்ணை பாராட்டுவது ஜென்டில்மேன் செய்வது. நான் உயரமான சேரில் ஏறி உங்களை பாராட்டுகிறேன் தீபிகா என்று நடிகர் போமன் இரானி தெரிவித்துள்ளார்.

அர்ஜுன் ராம்பல்
சீப்பான பத்திரிக்கை தர்மத்திற்கு தீபிகா சரியான பதில் அடி கொடுத்ததை நான் மலேசியாவில் இருந்து படித்தேன். வெல் டன் கேர்ள் என்று அர்ஜுன் ராம்பல் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











