இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பு தேவையா?: ரன்வீர், தீபிகா மீது இயக்குனர் கோபம்
மும்பை: பத்மாவதி பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் ரன்வீர் சிங்கும், தீபிகாவும் ஜோடியாக பார்ட்டிக்கு சென்றுள்ளனர்.
பத்மாவதி பாலிவுட் படத்தில் ராணி பத்மினியை அவமதித்துள்ளதாகக் கூறி சில அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதையடுத்து டிசம்பர் 1ம் தேதி ரிலீஸாக வேண்டிய படம் தள்ளிப் போயுள்ளது.
படம் குறித்து இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி விளக்கம் அளித்தும் யாரும் அதை கேட்கத் தயாராக இல்லை.

ரன்வீர்
பத்மாவதி படம் முடியும் வரை தயவு செய்து ஜோடியாக ஊர் சுற்றாதீர்கள் என்று காதலர்களான ரன்வீர் சிங், தீபிகா படுகோனேவுக்கு பன்சாலி கோரிக்கை விடுத்தார்.

கில்ஜி
பத்மாவதி படத்தில் தீபிகா ராணி பத்மாவதியாகவும், ரன்வீர் சிங் மன்னர் அலாவுத்தீன் கில்ஜியாகவும் நடித்துள்ளனர். அதனால் தான் அவர்களை ஜோடியாக எங்கும் செல்லாதீர்கள் என்றார் பன்சாலி.

ஜோடி
பாலிவுட் இயக்குனர் ஜோயா அக்தர் தனது வீட்டில் நேற்று முன்தினம் மாலை பார்ட்டி கொடுத்தார். பார்ட்டியில் ரன்வீர், தீபிகா கலந்து கொண்டனர். அங்கிருந்து கிளம்பிச் சென்றபோது கைகோர்த்து சென்றனர்.

தீபிகா
ஜோடியாக சுத்தாதீர்கள் என்று படித்து படித்து சொல்லியும் கேட்க மாட்டீர்களா என்று பன்சாலி ரன்வீர், தீபிகா மீது கடுப்பில் உள்ளாராம். பத்மாவதி பிரச்சனை பெரிதாகியுள்ள நிலையில் அவர்கள் இப்படி செய்தது பன்சாலியை அதிருப்தி அடைய வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











