ஸ்மிருதி இரானி கலாய்த்த கையோடு திருமண புகைப்படங்களை வெளியிட்ட ரன்வீர், தீபிகா
Recommended Video

மும்பை: பாலிவுட் தம்பதியான ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் தங்களின் திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனேவும் இத்தாலியில் உள்ள லேக் கோமோ பகுதியில் திருமணம் செய்து கொண்டனர். நேற்று முன்தினம் கொங்கனி முறைப்படியும், நேற்று சிந்தி முறைப்படியும் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண நிகழ்ச்சியில் இருவீட்டார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.

திருமணம்
இத்தாலியில் பயங்கர பாதுகாப்பான இடத்தில் திருமணம் நடந்ததால் ரன்வீர் சிங், தீபிகாவின் புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. எப்பொழுது தான் புகைப்படங்களை வெளியிடுவீர்கள் என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர். இந்நிலையில் திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

ரன்வீர்
ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆளாக்கொரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படங்களில் இருவருமே மிகவும் மகிழ்ச்சியாகவும், அழகாகவும் உள்ளனர். இருவருமே திருமணத்தன்று சபயசாச்சி டிசைனர் உடை அணிந்திருந்தனர்.
கரண் ஜோஹார்
தீபிகா, ரன்வீர் சிங்கின் திருமண புகைப்படங்களை பார்த்த பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் அவர்களை வாழ்த்தியுள்ளனர். அந்த புகைப்படங்கள் மிகவும் அழகாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அனுஷ்கா சர்மா
ரன்வீர், தீபிகாவுக்கு பாலிவுட் நடிகைகள் அனுஷ்கா சர்மா, ப்ரியங்கா சோப்ரா, கத்ரீனா கைஃப், ஆலியா பட், நடிகர்கள் ஹ்ரித்திக் ரோஷன், ஆயுஷ்மான் குரானா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











