அதே உடையில் சென்னைக்கு வந்திறங்கிய ரன்வீர் சிங்.. ஆனா.. ஃபர்ஸ்ட் லுக் நிகழ்ச்சியில் ஆளே மாறிட்டார்!

சென்னை: தீபிகா படுகோனேவின் ஆடையை அணிந்தபடி போஸ் கொடுத்துள்ளார் ரன்வீர் சிங்கென ட்ரோல் செய்யப்பட்ட உடையுடன் சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்திறங்கியுள்ளார் ரன்வீர் சிங்.

நேற்று மதியம் சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்திறங்கிய ரன்வீர் சிங்கை கண்ட கோலிவுட் ரசிகர்கள் அவரை காண கூட்டமாக திரண்டனர்.

கமல்ஹாசன் தலைமையில் நேற்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற '83' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கத்தான் ரன்வீர் சிங் சென்னை வந்திருந்தார்.

போல்கா டாட் டிரெஸ்

போல்கா டாட் சட்டை மற்றும் பைஜாமாவை அணிந்தபடி ரன்வீர் சிங் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வைரலாக்கினார். ஃபேஷன் மற்றும் மாடலிங் துறையில் அதீத ஆர்வம் கொண்ட ரன்வீர் சிங்கின், இந்த வித்தியாசமான ஃபேஷன் உடை பலரது கவனத்தை ஈர்த்தது.

ட்ரோல்

என்னதான் ரன்வீர் சிங்கின் இந்த புதிய ஃபேஷன் உடைக்கு லைக்குகள் குவிந்தாலும், அதை விட ட்ரோல்கள் தான் அதிகளவில் நேற்று இணையத்தை ஈர்த்தது. தீபிகா படுகோனேவின் டிரெஸ்ஸை நீங்க போட்டுக்கிட்டீங்களா என்றே பல பாலிவுட் ரசிகர்களும், ரசிகைகளும் பங்கமாக ரன்வீர் சிங்கை கலாய்த்து கமெண்ட்டுகளை பறக்கவிட்டனர்.

அதே டிரெஸ்

இந்நிலையில், அதே போல்கா டாட் மற்றும் பைஜாமா டிரெஸ்ஸுடன் சென்னை வந்து இறங்கியுள்ளார் ரன்வீர் சிங். பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் ஆகிய படங்களில் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்திய ரன்வீர் சிங் சென்னை வந்துள்ளதை அறிந்த ரசிகர்கள் அவரை காண சென்னை விமான நிலையத்தில் கும்பலாக கூடினர். ரன்வீர் சிங் போல்கா டாட் உடையில் சென்னை வந்து இறங்கியதை பலரும் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.

’என்ன நிகழ்ச்சி

1983ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்றதை மையப்படுத்தி ‘83' என்ற தலைப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பாலிவுட் படத்தை தமிழில் கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் வெளியிடப் போகிறது. இதனை முன்னிட்டு நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரன்வீர் சிங், கபில் தேவ், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால், நிகழ்ச்சிக்கு அதே உடையில் வராமல் கோட் சூட் உடையில் செம்ம கெத்தாக ரன்வீர் சிங் வந்து அசத்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X