இந்த ஹீரோவுக்கு அடிபட்டால் படம் கண்டிப்பாக ஹிட்டாகிவிடுமாம்!
மும்பை: பத்மாவதி படப்பிடிப்பில் ரன்வீர் சிங்கிற்கு அடிபட்டதால் இந்த படம் ஹிட்டாகும் என்று படக்குழு நம்புகிறது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஷாஹித் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள பிரமாண்ட படம் பத்மாவதி. அதன் ட்ரெய்லரே புதிய சாதனை படைத்துள்ளது.
படம் வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி ரிலீஸாகிறது.

நம்பிக்கை
ஒரு படத்தில் நடிக்கும் போது தனக்கு காயம் ஏற்பட்டால் அந்த படம் ஹிட்டாகும் என்று ரன்வீர் சிங் நம்புகிறார். ரன்வீர் மட்டும் அல்ல அவரை வைத்து படம் எடுப்பவர்களும் நம்புகிறார்கள்.

காயம்
பத்மாவதி படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் ரன்வீர் சிங்கிற்கு காயம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரன்வீருக்கு காயம் ஏற்பட்டதால் பத்மாவதி ஹிட்டாகும் என்று நம்புகிறார்கள்.

ஹிட்
பன்சாலி இயக்கத்தில் ராம் லீலா படத்தில் நடித்தபோதும் ரன்வீர் சிங்கிற்கு காயம் ஏற்பட்டது. அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

தீபிகா
பாஜிராவ் மஸ்தானி படத்தில் போர் காட்சியில் நடித்தபோது ரன்வீருக்கு அடிபட்டு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. பாஜிராவ் மஸ்தானி படமும் சூப்பர் ஹிட்டானது. ராம் லீலா, பாஜிராவ் மஸ்தானி போன்று பத்மாவதியும் ஹிட்டாகும் என்று படக்குழு நம்புகிறது.


Click it and Unblock the Notifications











