டுவாடா குட்டா டாமி சதா குட்டா குட்டா வித்தியாசமான முறையில் ரன்வீருக்கு வாழ்ந்து சொன்ன தீபிகா படுகோனே

புதுடெல்லி : பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தனது கணவர் ரன்வீர் சிங்கின் பிறந்த நாளுக்கு நடனமாடி பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

இணையத்தில் வைரலான "டுவாடா குட்டா டாமி" என்ற பாட்டுக்கு இவர்கள் ஆடிய நடனம் ரசிக்கும் படியும் சிரிக்கும் படியும் இருந்தது.

தற்போது இந்த வீடியோ அவரின் ரசிகர்களால் வேகமாக வைரலாகி வருகிறது.

துடிப்பான நடிப்பு

துடிப்பான நடிப்பு

பாலிவுட்டில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் நடிகர் ரன்வீர் சிங் துடிப்பான நடிப்பு குறும்புத் தனமான பேச்சு என பாலிவுட்டை கலக்கி வருகிறார். 2010ஆம் ஆண்டு வெளியான பாண்ட் பாஜா பாரத் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்த ரன்வீர் சிங் ராம் லீலா திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் அனைவரது கவனத்தையும் பெற்றார்.

வில்லனாக

வில்லனாக

வித்தியாசமான கதைகளில் சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் ரன்வீர் சிங் பத்மாவத் திரைப்படத்தில் மிரட்டும் வில்லனாக நடிப்பில் விஸ்வரூபம் எடுத்து பார்க்கும் அனைவரையும் அதிர வைத்திருந்தார். மேலும் இத்திரைப்படத்தில் நடிகை தீபிகா படுகோனே லீட் ரோலில் நடித்திருக்க இருவரும் காதலில் விழுந்து திருமணம் செய்து கொண்டனர்.

பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து

இந்நிலையில், ரன்வீர் சிங் தனது 36 பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு நடிகை தீபிகா படுகோனே வித்தியாசமான முறையில், "டுவாடா குட்டா டாமி" என்ற பாட்டுக்கு நடனம் ஆடி வாழ்த்தியுள்ளார். மேலும், இந்த வீடியோவில் இவர்கள் இருவரும் செய்யும் ரியாக்ஷன்ஸ் ரசிக்கும்படியும் சிரிப்பை வரவைப்பதாகவும் இருந்தது.

இணையத்தில் வைரல்

இணையத்தில் வைரல்

"டுவாடா குட்டா டாமி என்றும் சதா குட்டா குட்டா" என்ற இந்த பாடல் பாடல் இணையத்தில் மிகவும் பிரபலமான பாடலாகும். இன்ஸ்டாகிராமில் பல பிரபலங்களும் இந்த பாட்டுக்கு நடனமாடி உள்ளனர். இந்த பாடலை யஷ் ராஜ் முக்தே இசையமைப்பில் ஷாஹனாஸ் கில் பாடிய பாடலாகும்.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரன்வீர் சிங் தனது ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக புது படம் குறித்த அறிவிப்வை வெளியிட்டுள்ளார். கரண் ஜோஹர் இயக்கும் Rocky Aur Rani Ki Prem Kahani என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஆலியா பட் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த தகவலால் ரன்வீர் சிங்கின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X