துரந்தரை தூக்கியடிப்போம்னு எச்சரிக்கை.. பயந்த ரன்வீர் சிங்.. அடடா மன்னிப்பும் கேட்டுட்டாரே.. ஏன்?

மும்பை: கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அப்போது மேடை ஏறி பேசிய ரன்வீர் சிங் 'ஹுகும்' என்றும் ஜெயிலர் 2வுக்கு வெயிட்டிங் என்றும் பேசி ரஜினிகாந்த் ரசிகர்களை கவர்ந்தார்.

அதே போல, காந்தாரா பட நடிகர் ரிஷப் ஷெட்டியை பார்த்து காந்தாரா படத்தில் வரும் தெய்வத்தை போல ஆக்‌ஷன் செய்துவிட்டு, சாமுண்டி தேவியை பெண் பேய் என நினைத்து பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார்.

Ranveer Singh apology for hurting Daiva sentiment infront of Rishab Shetty

பாலிவுட் முதல் கன்னட திரையுலகம் வரை துரந்தர் ஹீரோ ரன்வீர் சிங்கின் செயலுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்த நிலையில், தற்போது தனது செயலுக்காக விளக்கம் கொடுத்து மன்னிப்பும் கேட்டுள்ளார்.

சர்ச்சை நாயகன் ரன்வீர் சிங்: முழு நிர்வாணமாக சில ஆண்டுகளுக்கு முன்னதாக ரன்வீர் சிங் போஸ் கொடுத்து வெளியிட்ட போட்டோக்கள் சர்வதேச அளவில் வைரலானது. இந்திய ரசிகர்கள் ரன்வீர் சிங்கின் செயலை கடுமையாக கண்டித்து தீபிகா படுகோன் கணவருக்கு உடுத்த துணி கூட இல்லையா? என கிண்டல் செய்து அவருக்கு துணிகளை கொரியர் பண்ணும் வேலைகளையும் பார்த்து கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில், காந்தாரா படத்தில் இடம்பெற்ற கன்னட தெய்வங்களை அவமதித்து விட்டார் என மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ரன்வீர் சிங்.

மன்னிப்புக் கேட்ட ரன்வீர் சிங்: தனது நோக்கம் திறமையான நடிப்பை வெளிப்படுத்திய ரிஷப் ஷெட்டியின் கடுமையான உழைப்பை பாராட்டுவது மற்றும் அதை ஹைலைட் செய்து காட்டுவது மட்டுமே என்றும் அதை சிலர் தவறாக புரிந்துக் கொண்டு விட்டனர் என்றும் தன்னுடைய செயல் எந்தவொரு தெய்வத்தையும், மத நம்பிக்கையும் புண்படுத்துவது கிடையாது என்றும் யாருடைய மனதாவது புண்பட்டு இருந்தால் மன்னிப்புக் கோருகிறேன் என மன்னிப்புக் கேட்டுள்ளார்.

Ranveer Singh apology for hurting Daiva sentiment infront of Rishab Shetty

சாராவுடன் ஜோடி: தெய்வத்திருமகள் படத்தில் நிலா கதாபாத்திரத்தில் நடித்த குட்டி தேவதை சாரா அர்ஜுன் தற்போது பருவப் பெண்ணாக வளர்ந்துள்ள நிலையில், 40 வயதாகும் நடிகர் ரன்வீர் சிங் துரந்தர் படத்தில் சாரா அர்ஜுனை ஜோடியாக்கி அவருடன் ரொமான்ஸ் செய்வது குறித்து ஏற்கனவே பாலிவுட்டில் பலரும் ட்ரோல் செய்து வரும் நிலையில், இப்படியொரு சர்ச்சையில் சிக்கினால் பட ரிலீஸ் பிரச்சனையாக முடியும் என மன்னிப்புக் கேட்டுள்ளார் எனக் கூறுகின்றனர்.

துரந்தர் ரிலீஸ் தேதி: இந்த வாரம் ரன்வீர் சிங், மாதவன், சஞ்சய் தத், அக்‌ஷய் கன்னா, சாரா அர்ஜுன் நடிப்பில் ஆதித்யா தர் இயக்கத்தில் உருவாகியுள்ள துரந்தர் திரைப்படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாகிறது. அகண்டா 2 மற்றும் துரந்தர் உள்ளிட்ட படங்கள் பான் இந்தியா அளவில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரன்பீர் கபூருக்கு அனிமல் படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில், ஏ சான்றிதழ் படமாக 3.35 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக துரந்தர் படம் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X