ஷாருக், சல்மானுக்கு அருகில்.. ரன்வீர் சிங் -தீபிகா தம்பதி வாங்கிய புது வீடு.. என்னது இவ்வளவு கோடியா?

மும்பை : பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவை திருமணம் செய்துள்ளார் ரன்வீர் சிங்.

இவர் தற்போது சர்க்கஸ், ராக்கி அவுட் ராணி கி பிரேம் கஹானி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் வரிசையில் இவர் இடம் பிடித்துள்ளார்.

ரன்வீர் -தீபிகா படுகோனே

ரன்வீர் -தீபிகா படுகோனே

நடிகை தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் கடந்த ஆண்டில் காதல் திருமணம் செய்தனர். இந்தத் திருமணம் இந்திய அளவில் சிறப்பாக பார்க்கப்பட்டது. ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் இதில் பங்கேற்று சிறப்பித்தனர். இந்த ஜோடி திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து தங்களது கேரியரில் பிசியாக உள்ளனர்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

பாலிவுட்டில் முன்னணி நடிகராக நடித்துவரும் ரன்வீர் சிங், தற்போது சர்க்கஸ், ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி போன்ற படங்களில் நடித்து வருகிறார். அவருடைய காதல் மனைவி தீபிகா படுகோனேவும் தொடர்ந்து சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

4 மாடி அடுக்குமாடி குடியிருப்பு

4 மாடி அடுக்குமாடி குடியிருப்பு

இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து தற்போது மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் 4 மாடி அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளனர். பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் இந்தப் பகுதியில் அதிகமான குடியிருந்துவரும் நிலையில், ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் வீடுகளின் பக்கத்தில் இந்த குடியிருப்பை வாங்கியுள்ளார் ரன்வீர் சிங்.

ரூ.119 கோடிக்கு வீடு

ரூ.119 கோடிக்கு வீடு

தன்னுடைய தந்தையுடன் இணைந்து ஓ பைவ் ஓ மீடியா கம்பெனி மூலம் இந்த குடியிருப்பை ரன்வீர் சிங் புக் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பை 119 கோடி ரூபாய்க்கு அவர் வாங்கியுள்ளார். மேலும் 16, 17, 18 மற்றும் 19ம் தளங்களில் அந்த வீடு அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Recommended Video

நான் First தமிழ் பேசின வார்த்தை 'வணக்கம்' - Aadhi | Ilaiyaraaja | Aakanksha Singh
19 கார்கள் நிறுத்தும் வசதி

19 கார்கள் நிறுத்தும் வசதி

19 கார்களை நிறுத்தும் வசதிகளை கொண்ட சாகர் ரேஷம் என்ற இந்த குடியிருப்பு 11,266 சதுர அடி கொண்டதாக காணப்படுகிறது. இந்த வீட்டின் பத்திர பதிவிற்காக மட்டும் 7.13 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த வீட்டிற்கு ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே குடிபெயர உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X