ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!

மும்பை : நடிகர் ரன்வீர் சிங் தனது ஒவ்வொரு திரைப்படத்தின் மூலம் பாலிவுட் ரசிகர்களை மகிழ்வித்து வருவதோடு வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றிகளை குவிப்பதில் இவருக்கு பெரும் பங்குண்டு.

கிரிக்கெட் வீரர் கபில்தேவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரன்வீர் சிங் அதைத் தொடர்ந்து சூரியவன்ஷி, ஜயேஷ்பாய் ஜர்டார், சர்க்கஸ் போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

எதையும் வித்தியாசமாக செய்யக்கூடிய பண்புடைய நடிகர் ரன்வீர் சிங் இப்பொழுது ரெட்ரோ ஸ்டைல் லுக்கில் கலர்ஃபுல்லான காஸ்டியூமில் இருக்கும் வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறார்.

துடிப்பான நடிப்பு

துடிப்பான நடிப்பு

பாலிவுட்டில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் நடிகர் ரன்வீர் சிங் துடிப்பான நடிப்பு குறும்புத் தனமான பேச்சு என பாலிவுட்டை கலக்கி வரும் இவர் தொடர் வெற்றித் திரைப்படங்களின் மூலம் பாலிவுட்டின் தவிர்க்கமுடியாத இளம் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். 2010ஆம் ஆண்டு வெளியான பாண்ட் பாஜா பாரத் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்த ரன்வீர் சிங் ராம் லீலா திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் அனைவரது கவனத்தையும் பெற்றார்.

வில்லனாக நடிப்பில்

வில்லனாக நடிப்பில்

வித்தியாசமான கதைகளில் சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் ரன்வீர் சிங் பத்மாவதி திரைப்படத்தில் மிரட்டும் வில்லனாக நடிப்பில் விஸ்வரூபம் எடுத்து பார்க்கும் அனைவரையும் அதிர வைத்திருந்தார். மேலும் இத்திரைப்படத்தில் நடிகை தீபிகா படுகோனே லீட் ரோலில் நடித்திருக்க இருவரும் காதலில் விழுந்து திருமணம் செய்து கொண்டு பாலிவுட்டில் மிகச் சிறந்த ஜோடியாக உள்ளனர்.

தேதி முடிவு செய்யப்படாமல்

தேதி முடிவு செய்யப்படாமல்

இதுவரை சரித்திர திரைப்படங்களிலும் கமர்ஷியல் திரைப் படங்களில் மட்டுமே நடித்து பாலிவுட்டில் பாக்ஸ் ஆபீசை தெறிக்க விட்டு வந்த ரன்வீர் சிங் இப்பொழுது கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் 83 சென்ற ஆண்டே வெளியிட திட்டமிடப்பட்டிந்த நிலையில் குரானா காரணமாக வெளியீட்டு தேதி முடிவு செய்யப்படாமல் தள்ளி போய் உள்ளது. மேலும் இதில் நடிகர் ஜீவா முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

80ஸ் ஹீரோ போலவே

80ஸ் ஹீரோ போலவே

எதையும் வித்தியாசமாக செய்யும் இவர் இப்பொழுது ரெட்ரோ ஸ்டைலில் கண்கள் கூசும் கலர்ஃபுல்லாக பூப்போட்ட ஜாக்கெட், ஜிகு ஜிகுன்னு மின்னும் வெல்வெட் பேண்ட், குக்கி என எழுதப்பட்ட ஹேர்பேண்ட் மட்டும் பழைய காலத்து கூலிங்கிளாஸ் என பார்ப்பதற்கு 80ஸ் ஹீரோ போலவே இருக்கும் ரன்வீர் சிங்கின் இந்த வித்தியாசமான ரெட்ரோ ஸ்டைல் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இப்பொழுது இணையத்தை கலக்கி வைரலாகி வர ஒருவேளை இது அடுத்த படத்தின் கெட்டப்பா இருக்குமோ என ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X