தீபிகாவை மணந்த நடிகர் ரன்வீர் சிங்: நாளை மீண்டும் திருமணம்
Recommended Video

லேக் கோமோ: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிகை தீபிகா படுகோனேவை கொங்கனி முறைப்படி இன்று திருமணம் செய்து கொண்டார்.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனேவும் தங்கள் காதலை பெற்றோர் சம்மதத்துடன் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இத்தாலியில் உள்ள லேக் கோமோ பகுதியில் அவர்களின் திருமண நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. கொங்கனி முறைப்படி அவர்களின் திருமணம் இன்று மாலை 4 மணி அளவில் நடந்துள்ளது.
இதையடுத்து சிந்தி முறைப்படி அவர்கள் நாளையும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவர்களின் திருமண நிகழ்ச்சிகளில் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். திருமணம் நடக்கும் இடத்தில் உலக தலைவர்களுக்கு அளிக்கப்படும் அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஆளில்லா விமானங்கள் மூலம் அந்த இடம் கண்காணிக்கப்படுகிறது, விருந்தினர்கள் கையில் சிறப்பு பேண்ட் கட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த இடத்திற்குள் நுழைய செல்போனில் வரும் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டும். இத்தனை கெடுபிடிகள் உள்ளதால் திருமண புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











