ஐஐஎஃப் ஏ 2019 பரிசளிப்பு விழா: ரசிகர்களின் இதயங்களை வென்ற ரன்வீர் சிங் தீபிகா படுகோனே
Recommended Video
சென்னை: ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனேவும் திருமணத்திற்கு பிறகு முதன் முறையாக IIFA 2019 விருது வழங்கும் விழாவில் ஜோடியாக கலந்துகொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்களை தீபிகா தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதைப்பார்த்து பேபி யூ ஆர் கில்லிங் மீ என்று ரன்வீர் சிங் ட்வீட் செய்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் இளம் ஜோடிகளான ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே தம்பதியினர் முதல் முறையாக ஜோடி சேர்ந்து செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெற்ற இந்த ஆண்டிற்கான சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (International Indian Film Academy-IIFA) வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர்.
2019 ஐஐஎஃப்ஏ விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட இந்த நட்சத்திர தம்பதிகள் ஒட்டுமொத்தமாக ரசிகர்களின் இதயங்களை வென்றனர் என்று தான் சொல்ல வேண்டும். தீபிகா படுகோனே கடந்த 2013ஆம் ஆண்டில் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்காக சிறப்பு ஐஐஎஃப்ஏ விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் காதல் ஜோடி
கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலா திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். அந்த படத்தில் அவர்களின் கெமிஸ்ட்ரி மிகவும் அற்புதமாக இருந்தது. அப்போது நமக்கு தெரியாது, அவர்கள் இருவரும் மிஸ்டர்-மிஸஸ் என மாறுவார்கள் என்று. இந்த அழகிய காதல் ஜோடியின் ஆறு வருட காதல் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் திருமண பந்தத்தில் இணைந்தது.
ஐஐஎஃப்ஏ விருது வழங்கும் விழா
ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனேவும் திருமணத்திற்கு பிறகு முதன் முறையாக 2019 ஐஐஎஃப்ஏ விருது வழங்கும் விழாவில் பங்கேற்றனர். இந்த விழாவிற்கு வந்த தீபிகா படுகோனே வயலட் நிற கவுரவ் குப்தா கவுன் அணிந்து பிரகாசமாக காட்சியளித்தார். இந்த இளவரசி அப்போது எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்களில் சிலவற்றை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

ரன்வீர் தீபிகா தம்பதி
ரன்வீர் சிங் ஒரு ஜாக்கெட், பேண்ட், பூட்ஸ் அணிந்து கொஞ்சம் கலக்கலான காமெடியான தோற்றத்தில் வந்திருந்தார். இந்த விழாவில் தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதி ஒருவரை ஒருவர் கையால் பிடித்துக்கொண்டு அமர்ந்து இருந்தனர்.
ரொமான்ஸ் ட்வீட்
இது அவர்கள் திருமணத்திற்கு பிறகு ஜோடியாக கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி என்பதால் பார்வையாளர்களின் ஒட்டு மொத்த பார்வையும் இவர்கள் மேல் தான் இருந்தது. அதில் ஒரு புகைப்படத்திற்கு பேபி யூ ஆர் கில்லிங் மீ என்று ரன்வீர் சிங் ட்வீட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











