»   »  திருமண பந்தத்தில் இணையும் தீபிகா படுகோனே-ரன்வீர் சிங்?

திருமண பந்தத்தில் இணையும் தீபிகா படுகோனே-ரன்வீர் சிங்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட்டின் 'ஹாட்' காதல் ஜோடி என புகழப்படும் ரன்வீர் சிங்-தீபிகா படுகோனே திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறப் போவதாக, பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரன்வீர் - தீபிகா இருவரும் ஒருவரையொருவர் காதலிப்பது ஊரறிந்த விஷயம் தான். ஆனால் இவர்களின் திருமணம் எப்போது? என்ற கேள்விக்கான பதில் இன்னும் வெளியாகவில்லை.

Ranveer Singh - Deepika Padukone Wedding Plans

இதற்கிடையில் ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தீபிகாவுக்குக் கிடைத்தது. இதனால் பாலிவுட் பக்கம் தீபிகாவின் நடமாட்டம் குறைந்து கொண்டே வருகிறது.

தற்போது நீண்ட இடைவேளைக்குப் பின் 'பத்மாவதி' என்னும் படத்தில் தீபிகா நடிக்கவிருக்கிறார். சில மாதங்களுக்கு முன் ரன்வீர் சிங்கின் வாழ்க்கையில் வேறு ஒரு பெண் வந்து விட்டதாகவும், இதனால் தீபிகா படுகோனே-ரன்வீர் சிங் காதல் முடிவுக்கு வந்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

இதனால் இருவர் குறித்து எழும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தங்கள் திருமண அறிவிப்பை இந்த ஜோடி விரைவில் வெளியிடவிருக்கிறதாம்.

சமீபத்தில் இருவரின் குடும்பத்தாரும் ஆஸ்திரியா சென்று அங்கு மனம் விட்டுப் பேசியதாகவும், திருமணத்தை எப்படி நடத்துவது? என்று திட்டங்கள் தீட்டியதாகவும் மும்பை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் வெகு விரைவில் தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் திருமண அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources said Ranveer Singh - Deepika Padukone enters Wedlock Soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil