Dhurandhar 2 Box Office Day 3: 300 கோடி.. பந்தயம் அடிக்கும் துரந்தர் 2 வசூல்.. தமிழ் டப்பிங் கை கொடுத்துதா?

சென்னை: இயக்குநர் ஆதித்ய தார் இயக்கத்தில் உருவாகி மார்ச் 19ஆம் தேதி வெளியான படம் துரந்தர் 2. இந்த படம் ஏற்கனவே வெளியான துரந்தர் படத்தின் இரண்டாவது பாகம். ரன்வீர் சிங் நடித்துள்ள இந்த படத்தை பார்த்த பலரும் பாராட்டி வருகிறார்கள். 18ஆம் தேதி இரவு துரந்தர் படத்தின் பிரீமியர் காட்சி இந்தியா முழுவதும் திரையிடப்பட்டது. குறிப்பாக திரைத்துறையில் இருந்து பலரும் தங்களது விமர்சனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். முதல் மூன்று நாளில் படம் எந்த அளவுக்கு வசூலித்துள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் ஊடுருவி, பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடு மற்றும் நடவடிக்கைகளை மையமாக கொண்டு, உண்மைச் சம்பவங்கள் மற்றும் கற்பனைக் கதை என இரண்டையும் இணைத்து இந்த படத்தை உருவாக்கி உள்ளார்கள். படம் கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக மாறியது. இப்படி இருக்கையில் இதன் இரண்டாவது பாகம் மார்ச் 19ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.

Ranveer Singh Dhurandhar 2 Box Office Day 3 Collection Details Across India Which Cross 300 Crores

படம் முதல் நாளில் உலக அளவில் ரூபாய் 241 கோடிகளை வசூலித்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது இந்தி சினிமாவில் முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய படம் என்று வசூல் சாதனை படைத்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் ரூபாய் 145 கோடிகள் என்று கூறப்படுகிறது. இரண்டாவது நாளில் படம் இந்திய அளவில் ரூபாய் 82.35 கோடிகளும் மூன்றாவது நாளில் ரூபாய் 83.53 கோடிகளும் வசூலித்ததாக NDTV Profit வலைதளம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் மார்ச் 22 ஆம் தேதி காலை 7 மணி நிலவரப்படியான தகவல். இதனால் இந்தியாவில் மட்டும் படம் ரூபாய் 300 கோடிகளுக்கு மேல் வசூலித்துவிட்டது. அதேபோல் வெளிநாட்டு வசூலைக் கணக்கில் கொண்டால் படத்தின் வசூலானது கிட்டத்தட்ட ரூபாய் 500 கோடிகள் வரும் என்றும் கூறப்படுகிறது.

Ranveer Singh Dhurandhar 2 Box Office Day 3 Collection Details Across India Which Cross 300 Crores

படம் மார்ச் 21ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பிராந்திய மொழிகளிலும் வெளியானது. இதனால் படத்தின் வசூலானது இரண்டாவது நாளை விட அதிகரிக்க காரணம் அதுதான் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் படம் உலக அளவில் ரூபாய் 500 கோடிகளை ஈட்டி விட்டதாக கூறப்படுகிறது. இன்று வார இறுதி என்பதால் இன்றும் வசூல் இந்திய அளவில் அதிகரிக்கும் என்றும், தமிழில் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X