‘துரந்தர்‘ நாயகன் ரன்வீருக்கு படத்தில் நடிக்க தடை.. ‘டான் 3‘ பட பிரச்சனையால் வந்த வினை!

மும்பை: நடிகர் ரன்வீர் பாலிவுட் படங்களில் நடிக்க திரைப்பட தொழிலாளர் அமைப்பான FWICE (Federation of Western India Cine Employees) தடை விதித்துள்ளது. 'டான்' படத்திற்கு கூடுதல் சம்பளம் கேட்டதாகவும், பட காட்சிகளை மாற்றும் படி கூறி திடீரென படத்தில் இருந்து
திடீரென விலகிய விவகாரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குநர் ஃபர்ஹான் அக்தர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'டான் 3' முதலில் ரன்வீர் சிங் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், படப்பிடிப்பு தொடங்குவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு அவர் திடீரென படப்பிடிப்பிலிருந்து விலகியதால், தயாரிப்பு தரப்புக்கும், தொழிலாளர் அமைப்புகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாக, கடந்த ஏப்ரல் மாதம் ஃபர்ஹான் அக்தர் FWICE-க்கு புகார் அளித்தார். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் தயாரிப்பாளர் ரிதீஸ் சித்வனி மற்றும் ஃபர்ஹான் அக்தர் இருவரும் FWICE-க்கு விளக்கம் அளித்தனர். ஆனால் ரன்வீர் சிங் தரப்பில் இருந்து பல முறை அழைப்பு விடுத்தும் அவர் எந்த பதிலும் வரவில்லை.

Bollywood Ranveer Singh Don 3
Photo Credit:

ரன்வீர் சிங்: இதையடுத்து, ரன்வீர் சிங்கின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், "திரைப்பட துறையையும், 'டான்' படக்குழுவினரையும் ரன்வீர் சிங் மிகுந்த மரியாதையுடன் பார்க்கிறார். இந்த விவகாரத்தில் பொது வெளியில் கருத்து தெரிவிக்காமல் அமைதியாக இருந்தது அவரது விருப்பமான முடிவு. தொழில்முறை மற்றும் தனிப்பட்ட உறவுகள் மரியாதையுடனும் கையாளப்பட வேண்டும் என்பது அவரின் எண்ணம். மேலும், ஊடகத்தில் பரவும் வதந்திகளுக்கு அவர் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என ரன்வீர் சிங் நினைக்கிறார். தற்போது அவர், தனது பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். 'டான்' படத்திற்கும் அதன் குழுவினருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார் என அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

டான் சர்ச்சை: இந்நிலையில், நடிகர் ரன்வீர் பாலிவுட் படங்களில் நடிக்க திரைப்பட தொழிலாளர் அமைப்பான FWICE தடை விதித்துள்ளது. 'டான்' படத்திற்கு கூடுதல் சம்பளம் கேட்டதாகவும், பட காட்சிகளை மாற்றும் படி கூறி படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் விலகியதால், தயாரிப்பு நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரன்வீர் சிங் மற்றும் 'டான் 3' பட சர்ச்சை பாலிவுட்டில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X