நடிகர் ரன்வீர் சிங்குடன் ஆனந்த நடனமாடிய சத்குரு: வைரல் வீடியோ

By Siva

பெங்களூர்: ஐஐஎம் பெங்களூர் நடத்திய லீடர்ஷிப் கான்கிளேவ் நிகழ்ச்சியில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் சேர்ந்து மேடையில் ஆனந்த நடனம் ஆடியுள்ளார்.

ஐஐஎம் பெங்களூர் நடத்திய லீடர்ஷிப் கான்கிளேவ் நிகழ்ச்சி தாஜ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், சத்குரு ஜக்கி வாசுதேவ், முன்னாள் பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனே, தொழில் அதிபர் ஆகாஷ் அம்பானி, பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஜூலை 20 மற்றும் 21 ஆகிய இரம்டு நாட்கள் இந்த நிகழ்ச்சி நடந்தது.

பிரகாஷ் படுகோனே

பிரகாஷ் படுகோனே

முதல் நாள் நடந்த நிகழ்ச்சியில் பிரகாஷ் படுகோனே கலந்து கொண்டு விளையாட்டுத்துறை பற்றி உரையாற்றினார். அவர் உரையாற்றிவிட்டு வெளியே வந்தபோது ஒருவர் ஓடி வந்து அவரை முன் நின்றார். தன் முன்பு வந்த நின்ற நபரை பார்த்த பிரகாஷ் சிரித்தார். அதன் பிறகு இருவரும் கட்டிப்பிடித்தனர். அந்த நபர் வேறு யாரும் அல்ல நடிகர் ரன்வீர் சிங்.

ரன்வீர்

ரன்வீர்

21ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பேச ரன்வீர் வந்திருந்தார். இந்நிலையில் தனது வருங்கால மனைவியான நடிகை தீபிகா படுகோனேவின் தந்தை உரையாற்ற வந்துள்ளார் என்ற செய்தி அறிந்ததும் ஓடி வந்திருக்கிறார். கருப்பு நிற ஷார்ட்ஸ், தொப்பி, கண்ணாடி அணிந்து வந்ததால் ரன்வீரை திடீர் என்று பார்க்க யாருக்கும் அடையாளம் தெரியவில்லை.

ஜக்கி வாசுதேவ்

நிகழ்ச்சி மேடையில் ரன்வீர் சிங்கும், சத்குரு ஜக்கி வாசுதேவும் சேர்ந்து உற்சாகமாக நடனம் ஆடினார்கள். அதை பார்த்த பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை ரன்வீர் சிங் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

திருமணம்

திருமணம்

ரன்வீர் சிங் தற்போது ரோஹித் ஷெட்டியின் இயக்கத்தில் சிம்பா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கரண் ஜோஹார் தயாரிக்கும் இந்த படத்தில் ரன்வீருக்கு ஜோடியாக சயிப் அலி கானின் மகள் சாரா நடித்து வருகிறார். ரன்வீர் சிங் தனது காதலியான தீபிகா படுகோனேவை வரும் நவம்பர் மாதம் வெளிநாட்டில் வைத்து திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X