கமலுக்கே முத்தமா? சைமா விருது விழாவில் ரன்வீர் சிங் என்ன செஞ்சிருக்காருன்னு பாருங்க!
சென்னை: தென்னிந்திய திரைப்படங்களுக்கான சைமா விருது விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசனுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கமல்ஹாசனின் கைக்கு முத்தமிட்டு தொட்டு வணங்கிய வீடியோ சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் கலந்து கொள்ளும் மிகப்பெரிய விருது விழா நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

100 நாள் கடந்த விக்ரம்
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 100 நாட்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய படம் என்கிற சாதனையை கமல்ஹாசனின் விக்ரம் படைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் எந்தவொரு நிகழ்ச்சி நடத்தினாலும் கமல்ஹாசனை சிறப்பு விருந்தினராக அழைத்து விடுகின்றனர்.

இந்தியன் 2
இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், படு பிசியாக மாறி உள்ளார் கமல்ஹாசன். ஒரு பக்கம் இந்தியன் 2 இன்னொரு பக்கம் பிக் பாஸ் சீசன் 6க்கான வேலைகள் என பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் கமல், அடிக்கடி விருது விழா நிகழ்ச்சி, டிரைலர், ஆடியோ லாஞ்ச் உள்ளிட்ட சினிமா விழாக்களிலும் கலந்து கொள்கிறார்.

பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் கமல்
ரெட் ஜெயண்ட் மூவிஸ் விழா, வெந்து தணிந்தது காடு படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மற்றும் பொன்னியின் செல்வன் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா என பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் கமல்ஹாசன் சைமா விருது விழாவிலும் கம்பீரமாக கலந்து கொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் டிரெண்டாகி வருகின்றன.

கமல் கைக்கு முத்தம்
சைமா விருது விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கமல்ஹாசனை சந்தித்ததும் அருகே வந்த பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் அவரது கைக்கு முத்தம் கொடுத்தும், தொட்டுக் கும்பிட்டும் மரியாதை செலுத்தியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

83 படத்தை வெளியிட்டார்
ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான 83 படத்தை தமிழில் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டு இருந்தார் நடிகர் கமல்ஹாசன். சினிமாவில் உள்ள இளம் தலைமுறை நடிகர்கள் அனைவருக்கும் எப்போதுமே நடிப்புக்கான இன்ஸ்பிரேஷனாக உள்ளது கமல் நடித்த படங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்வாண சர்ச்சையை கடந்து
ரன்வீர் சிங் சமீபத்தில் பேப்பர் மேகஸினுக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தது பெரிய சர்ச்சையை கிளப்பியது. ஆனால், அதையெல்லாம் கடந்து 83 படத்தில் கபில் தேவாக வாழ்ந்த அவருக்கு சிறந்த நடிகருக்கான சைமா விருது வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தென்னிந்திய சைமா விருது நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications











