»   »  உங்கள எங்கயாவது ஜோடியா பார்த்தேன், அம்புட்டுதான்: ஹீரோ, ஹீரோயினை எச்சரித்த இயக்குனர்

உங்கள எங்கயாவது ஜோடியா பார்த்தேன், அம்புட்டுதான்: ஹீரோ, ஹீரோயினை எச்சரித்த இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிகை தீபிகாவை தவிர்க்க விருது விழா ஒன்றை புறக்கணித்துள்ளார்.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஹாலிவுட் சென்றதில் இருந்தே அவருக்கும், அவரது காதலரான ரன்வீர் சிங்கிற்கும் இடையே பிரச்சனையாக இருந்தது. அவர் வின் டீஸலுடன் சேர்ந்து நடித்த xXx: ரிட்டர்ன் ஆப் சாண்டர் கேஜ் படம் ஓடவில்லை.

இதையடுத்து நாடு திரும்பிய தீபிகா பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

ரன்வீர்

ரன்வீர்

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தீபிகா கற்பனையில் வின் டீஸலுடன் குடும்பம் நடத்தி குழந்தைகள் பெற்றுவிட்டதாக தெரிவித்தார். இது ரன்வீர் சிங்கை கோபம் அடைய வைத்தது.

காதல் முறிவு

காதல் முறிவு

ரன்வீர் சிங், தீபிகா படுகோனே பிரிந்துவிட்டதாக பாலிவுட்டில் கூறப்படுகிறது. அண்மையில் பார்ட்டி ஒன்றுக்கு வந்த ரன்வீர் தீபிகாவை கண்டுகொள்ளவே இல்லை.

தீபிகா

தீபிகா

டெல்லியில் நடந்த விருது விழாவில் தீபிகா கலந்து கொள்ளக்கூடும் என நினைத்து ரன்வீர் சிங் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளார். ரன்வீர் தீபிகாவை ஒதுக்கத் துவங்கியுள்ளார்.

பன்சாலி

பன்சாலி

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வரும் பத்மாவதி படத்தில் ராணி பத்மாவதியாக தீபிகாவும், மன்னர் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீரும் நடிக்கிறார்கள்.

தாக்குதல்

தாக்குதல்

பத்மாவதி, அலாவுதீன் உறவு கொள்ளும் காட்சி உள்ளது என்று நினைத்து கர்ணி சேனா அமைப்பினர் படப்பிடிப்பு தளத்தை சேதப்படுத்தியதுடன் பன்சாலியையும் தாக்கினர். இதையடுத்து தான் தீபிகா, ரன்வீர் எங்கேயும் சேர்ந்து போகக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளாராம் பன்சாலி.

English summary
Bollywood actor Ranveer Singh has given a miss to an award function because Deepika Padukone would be present.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil