twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரன்வீர் சிங் நிர்வாண உடம்புக்கு ஆடை: பிரபல விளம்பர நிறுவனத்தின் மார்க்கெட் வித்தையா?

    |

    பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஒரு பத்திரிக்கைக்கு உடலில் சிறு ஆடை கூட இல்லாமல் நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்ததற்கு சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.

    இதற்கிடையில் பிரபல ஃபேஷன் பிராண்ட் ஒன்று ரன்வீர் ஆடைகளை அணிவது போல் புகைப்படத்தை எடிட் செய்து வெளியிட்டுள்ளது.

    இது விளம்பர நிறுவன உத்தியா? பட புரமோஷனா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    குழந்தை முகம் முதல் கொடூர ரோலக்ஸ் முகம்வரை.. சூர்யா கடந்து வந்த கரடுமுரடான பாதை! குழந்தை முகம் முதல் கொடூர ரோலக்ஸ் முகம்வரை.. சூர்யா கடந்து வந்த கரடுமுரடான பாதை!

    விளம்பர நிறுவனம் வெளியிட்ட புகைப்படம்

    விளம்பர நிறுவனம் வெளியிட்ட புகைப்படம்

    பிரபல ஃபேஷன் பிராண்டான மிந்த்ரா, ரன்வீரின் நிர்வாண புகைப்படத்தை எடிட் செய்து, அவர் தனது பிராண்டின் ஆடைகளை அணிந்திருப்பது போல் புகைப்படத்தை மாற்றியுள்ளது. மேலும் இந்த புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது. தற்போது இந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மிந்த்ராவும் ரன்வீரும் பெட்ஷீட் அச்சிடப்பட்ட சட்டையும் சிவப்பு நிற யோகா பேன்ட்டும் அணிந்திருந்தனர.

    விளம்பர நிறுவனம் உத்தியா?

    விளம்பர நிறுவனம் உத்தியா?

    மிந்த்ரா பகிர்ந்துள்ள புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர் இது சிறந்த எடிட்டிங் என்கிறார்கள், சிலர் இது ஒரு மார்க்கெட்டிங் வித்தை என்று கூறுகிறார்கள். மேலும் பலர் போட்டோவுக்கு ரன்வீர் ஆடை அணிய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினர். வித்தியாசமான காஸ்ட்யூம் மூலம் செய்திகளில் இடம்பிடித்த ரன்வீர் கபூர், தற்போது ஆடை அணியாமல் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.

    என் நிர்வாணம், எதிரில் இருப்பவர்கள் தான் சங்கடப்படுவார்கள்

    என் நிர்வாணம், எதிரில் இருப்பவர்கள் தான் சங்கடப்படுவார்கள்

    அவரது போட்டோஷூட் மற்றும் மக்களின் கருத்துகளுக்கு பதிலளித்த ரன்வீர் சிங், "உடல் ரீதியாக நான் நிர்வாணமாக இருப்பது மிகவும் எளிதானது. சில நிகழ்ச்சிகளில் நான் நிர்வாணமாக இருக்கிறேன். எனக்குள் இருக்கும் ஆன்மாவும் நிர்வாணமாக உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் முன் என்னால் நிர்வாணமாக நிற்க முடியும். அது என்னை சங்கடப்படுத்தாது. இது எனக்கு முன்னால் இருப்பவர்களை சங்கடப்படுத்தக்கூடும், ஆனால் மக்களின் கருத்துக்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை."

    அடுத்த பட ப்ரமோஷனுக்காக இந்த விளம்பரமா?

    அடுத்த பட ப்ரமோஷனுக்காக இந்த விளம்பரமா?

    ரன்வீரின் படங்களுக்கு வரும் அவர் தற்போது ரோஹித் ஷெட்டி இயக்கும் சர்க்கஸ் படத்தில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜாக்குலின் பெர்னாண்டஸ், வருண் சர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர். கரண் ஜோஹர் இயக்கிய ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி படத்தில் நடித்தார். இந்த படத்தில் ஆலியா பட் மற்றும் ரன்வீர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ஒருவேளை இந்தப்படம் பேசப்பட வேண்டும் என்பதற்காக இப்படி நிர்வாண போஸ் கொடுத்தாரா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

    விளம்பர நிறுவன பொருட்களை விற்க இப்படி போஸ் கொடுத்தாரா?

    விளம்பர நிறுவன பொருட்களை விற்க இப்படி போஸ் கொடுத்தாரா?

    சமீபத்தில் மும்பை சாலைகளில் ரன்வீர் சிங் ஆட்டோவில் வலம் வந்தார். இந்த வீடியோவும் வைரலானது. முகத்தில் துணியுடன் ஆட்டோவில் ஏறிய ரன்வீர், தனக்குப் பிடித்த இடங்களில் சுற்றிக் கொண்டிருந்தார். விளம்பரத்திற்காக எதையும் செய்யும் ரன்வீர் நிர்வாண புகைப்பட போஸ் விளம்பர நிறுவன ஆடையை விற்பனை செய்யும் உத்தியா? அல்லது அடுத்த படம் வரும் வரை ஊடக வெளிச்சத்திற்கான உத்தியா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    விளம்பரத்திற்காக செய்வது எதிர்மறை பிரச்சினையாகவும் ஆகும்

    விளம்பரத்திற்காக செய்வது எதிர்மறை பிரச்சினையாகவும் ஆகும்

    தனது படம் வரும்போது மக்கள் கவனத்தை கவர கோலிவுட், ஹாலிவுட், பாலிவுட் நடிகர்கள் தற்போது விளம்பர நிபுணர்கள் சொல்லும் யோசனைகளை கேட்டு கண்டதையும் செய்கின்றனர். படம் வெளியாவதற்கு முன் யாரிடமாவது வம்பிழுப்பது, எதையாவது பேசுவது, கதாநாயகியுடன் காதல் என கிளப்பி விடுவது, அரசியல் பேசுவது, சர்ச்சையான பிரச்சினைகளை தொடுவது என பலரும் பல விஷயங்களில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் அது சில நேரம் எதிர்மறை விமர்சனத்தையும் கொடுத்து விடுகிறது.

    English summary
    Ranveer Singh nude photoshoot: marketing gimmick by a celebrity ad agency?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X