நிர்வாண போட்டோஷூட் விவகாரம்.. ரன்வீர் சிங்கிடம் இரண்டு மணி நேரம் விசாரணை!

மும்பை : நிர்வாண போட்டோஷூட் விவகாரம் தொடர்பாக ரன்வீர் சிங் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

ரன்வீர் சிங் 2010ம் ஆண்டு பேண்ட் சர்மா பாராத் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதையடுத்து, லூட்டேரா, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத், சிம்பா, கல்லி பாய், 83 உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ஜெயேஷ்பாய் ஜோர்தார், சர்க்கஸ், ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி என ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். மேலும், அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கில் ரன்வீர் நாயகனாக நடிக்க உள்ளார்.

ரன்வீர் சிங்

ரன்வீர் சிங்

நடிப்பை தாண்டி மாடலிங்கில் கவனம் செலுத்தி வரும் ரன்வீர் சிங், வித்தியாசமான ஆடைகள் அணிவது, ஹேர்ஸ்டைல் வைத்துக் கொள்வது என அவ்வப்போது போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், ரன்வீர் பத்திரிக்கை ஒன்றுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார். ரன்வீரின் இந்த நிர்வாண போட்டோஷூட்டிற்கு சமூக வலைதளங்களில் ஏராளமான எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.

பெண்களை புண்படுத்திவிட்டார்

பெண்களை புண்படுத்திவிட்டார்

பெங்காலி நடிகையும் அரசியல்வாதியுமான மிமி சக்ரவர்த்தி, ரன்வீர் சிங்கின் புகைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். இதையடுத்து, தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று ரன்வீர் சிங் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு, பெண்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாகக் கூறி மும்பை செம்பூர் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து, நடிகர் ரன்வீர் சிங் மீது ஐபிசி பிரிவுகள் 292, 293, 509 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டன.

ஆஜராக சம்மன்

ஆஜராக சம்மன்

பெண்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக கூறி ரன்வீர்சிங்கிற்கு சம்மனை கொடுக்க ரன்வீர் சிங் வீட்டிற்கு காவல்துறையினர் சென்ற போது அவர் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றுள்ளதாகவும் அதனால் அவர் இங்கு இல்லை எனவும் காவல்துறையினரிடம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து 22ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

2 மணி நேரம் விசாரணை

2 மணி நேரம் விசாரணை

இதையடுத்து, விசாரணை அதிகாரி முன் ரன்வீர் சிங் இன்று காலை 7 மணி அளவில் ஆஜராகி நிர்வாண போட்டோஷூட் குறித்து தனது விளக்கத்தை அளித்தார். இதையடுத்து, சுமார் 9.30 மணியளவில் காவல் நிலையத்தை விட்டு ரன்வீர் சிங் வெளியேறினார். கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாக அவர் விளக்கம் அளித்துள்ளார். அவர் தேவையான விளக்கத்தை அளித்துள்ளதாகவும், தேவைப்பட்டால் மீண்டும் அழைக்கப்படுவார் என்று அதிகாரி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X