»   »  கோஹ்லி மனைவி பற்றி அவரின் முன்னாள் காதலர் சொல்வதை கேளுங்க...

கோஹ்லி மனைவி பற்றி அவரின் முன்னாள் காதலர் சொல்வதை கேளுங்க...

Posted By:
Subscribe to Oneindia Tamil
கோஹ்லி மனைவியை பற்றி அவரின் முன்னாள் காதலர் கூறிய ரகசியம்- வீடியோ

மும்பை: தனது முன்னாள் காதலி அனுஷ்கா சர்மா பற்றி ரன்வீர் சிங் தெரிவித்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.

பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் காதலித்து பிரிவது சகஜமாகிவிட்டது. ரன்வீர் சிங் நடித்த முதல் படத்தின் ஹீரோயின் அனுஷ்கா சர்மா. ரன்வீர் சிங்கும், அனுஷ்கா சர்மாவும் காதலித்து பிரிந்துவிட்டனர்.

அவரை பிரிந்த பிறகு அனுஷ்கா கோஹ்லியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அனுஷ்கா பற்றி ரன்வீர் கூறியிருப்பதாவது,

சினிமா

சினிமா

அனுஷ்கா இவ்வளவு தூரம் வந்துள்ளதை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. அவர் ஒரு அருமையான நடிகை. அதில் சந்தேகமே இல்லை. ஒரு மனுஷியாகவும் அவர் வளர்ந்துவிட்டார்.

முடிவு

முடிவு

அனுஷ்கா தனக்கு என்ன தேவை என்பதில் தெளிவாக உள்ளார். செய்வதை சிறப்பாக செய்கிறார். நீ ஒரு உதவாக்கரை அனுஷ்காவிடம் இருந்து ஏதாவது கற்றுக் கொள் என்று இயக்குனர் ஆதித்யா சோப்ரா அடிக்கடி என்னிடம் சொல்வார் என்றார் ரன்வீர் சிங்.

ரன்வீர்

ரன்வீர்

அனுஷ்காவை பிரிந்த பிறகு ரன்வீர் தீபிகா படுகோனேவை காதலித்து வருகிறார். கோஹ்லி-அனுஷ்கா திருமணத்திற்கு ரன்வீரும், தீபிகாவும் பூங்கொத்து அனுப்பியுள்ளனர்.

காதல்

காதல்

ரன்வீர் சிங் ஒரு காலத்தில் அனுஷ்காவை காதலித்ததால் அனுஷ்காவின் திருமணத்திற்கு தீபிகா வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் அவர் போன் மூலம் வாழ்த்தினாராம்.

English summary
Bollywood actor Ranveer Singh is all praise of his former girlfriend Anushka Sharma who has got married to cricketer Virat Kohli recently. Ranveer made his Bollywood debut with Anushka Sharma in Band Baaja Baaraat.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X